பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

தமிழ்ப் பழமொழிகள்


பாவம் என்று பழம் புடைவை கொடுத்தால் பின்னாடிபோய் முழம் போட்டுப் பார்த்தாளாம்.

(தோட்டத்தில் போய்.)

பாவம் ஒரு பக்கம்; பழி ஒரு பக்கம்.

பாவம் ஒன்று பார்த்தால் பழி ஒன்று வந்து சேரும். 16200


பாவம் சாடுவதற்கு அஞ்சுமா?

பாவம் தோன்றிய நாள் முதல் தோன்றிய பழையோன்.

பாவம் பண்ணினவன் பந்தியிலே.

பாவம் போகப் பால் வார்த்து முழுகு.

பாவலர் அருமை நாவலர் அறிவார் 16205


பாவலும் நாவலும் பத்தரை மாற்று.

பாவி அதிர்ஷ்டம் பதராய் விளைந்தது.

பாவிக்கு நூறு ஆயுசு.

(வயசு.)

பாவி கொடுமை பாலும் புளிக்கிறது.

பாவி பனைபோல வளரும். 16210


பாவி பாக்கியம் பதக்கு விளையும்.

பாவி பாவம் பதராய் விளைந்தது.

பாவி பேர் சொன்னால் ஏரியும் பாழ்.

பாவி போன இடம் பாதாளம்.

பாவியார் போன இடம் எல்லாம் பள்ளமும் திட்டியும். 16215

(தட்டையும்.)


பாவியையைப் பிடித்துப் பாம்பு ஆட்டுகிறது.

பாவில் இருக்கிறது; பார்த்தும் இருக்கிறது.

பாவி வாசலில் வகைப்பட்டுவிடேன் தறித்துணிச் சங்கடத்தை.

பாவி வீட்டிலே பசுவைக் கட்டு.

பாவின கல்லில் பாக்கு வெட்டினது போல. 16220


பாவை பாடிய வாயால் மோவைபாடி.

(மாணிக்கவாசகருக்கு இறைவன் சொன்னது.)

பாழ் அடைந்த பரமத்தி.

பாழ் அடைந்த பழங்குட்டிச் சுவர் போல.

பாழ் ஊரில் பயிக்கம் புக்காற் போல்.

(பயிக்கம் பிச்சை, தேவாரம்.)

பாழ் ஊருக்கு நரி ராஜா 16225