பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

217



பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே.

(வயிற்றிலே.)

பாழாய்ப் போகிறதைப் பசுவிடம் போடு; நாறிப் போகிறதை நாயிடம் போடு

(பசுவின் வாயில்.)

பாழில் போட்டாலும் பட்டத்தில் போடு.

பாழுக்கு இறைத்த நீர் போல.

பாழுனைக் கண்டால் பள்ளனுக்கு ஆனந்தம். 16230


பாற் கடலைக் குமக்கப் பார்த்திடும் பூனை.

பானுவைக் கண்ட பனி போலை.

பானை ஒட்டினாலும் ஒட்டும்; மாமியார் ஒட்டாள்.

பானைச் சோற்றுக்கு ஒரு சோறுபதம்.

(ஒரு பருக்கை.)

பானைப் பாலுக்கு ஒரு கொட்டு விஷம். 16235


பானை பண்ணுகிறவன் கையில் பானை உடையாது.

பானையில் அரிசி இருந்தால் பார்ப்பான் கண் உறங்கான்.

(சோறு இருந்தால்.)

பானையில் இருந்தால் அல்லவோ அகப்பையில் வரும்?

பானையில் உண்டானால் அகப்பையில வரும்.

பானையில் இருந்தால் பார்ப்பான் கண் அடையாள். 16240

(சோறு உள்ளவன். கண் உறங்காதாம்.)


பானையில் பதக்கு நெல் இருந்தால் மூலையில் முக்குறுணித் தெய்வம் கூத்தாடும்.

(முக்குறுணிப் பேய்.)

பானையோடு தின்று பறையனோடு போகிறார்களா?

பானைவாயை மூடலாம்; பட்டணத்துவாயை மூடலாமா?

பாஷைக்குத் தப்பு வராத கண்டன்.