8
தமிழ்ப் பழமொழிகள்
பெண்ணின் குணமும் அறிவேன்; சம்பந்தி வாயும் அறிவேன்.
- (குணம், வாய்.)
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பெண்ணுக்கு ஒரு கும்பிடு, வில்லுக்கு ஒரு கும்பிடு.
- (அவள் சொகுசுக்கு ஒரு கும்பிடு.அழகுக்கு ஒரு கும்பிடு.)
பெண்ணுக்குக் குணந்தான் சீதனம்.
பெண்ணுக்குக் கேடு பிறந்தகத்தார்; மக்களுக்குக் கேடு மாதா பிதா, 17045
பெண்ணுக்குச் சந்துரு பிறந்தகத்தார்.
பெண்ணுககுப் பெண ஆசை கொள்ளும் பேரணங்கு.
பெண்ணுக்குப் பெண்தான் சீதனம்.
பெண்ணுக்குப் பொன் இட்டுப் பார்; சுவருக்கு மண் இட்டுப் பார்.
பெண்ணுககுப் போட்டுப் பார்: மண்ணுக்குத் தீட்டிப் பார். 17050
பெண்ணுக்குப் போய்ப் பொன்னுக்குப் பின்வாங்கலாமா?
பெண்ணுககும் உண்டா பிசுககு?
பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பும் தேய்ப்பும் உண்டா?
பெண்ணுக்கு மாமியாரும் பிள்ளைக்கு வாத்தியாரும்.
பெணணுககு முநதிப் பூட்டிக் கொள்; மாட்டுப் பெண்ணுக்கு
முந்திச் சாப்பிட்டுக கொள். 17055
பெண்ணும் அல்லாமல் ஆணும் அல்லாமல் பெரு மரம்
- போல் வளருகிறது.
பெண்ணை அடிதது வளர்க்க வேணும்; முருங்கை மரத்தை
- ஒடித்து வளர்கக வேணும்.
பெண்ணைக் கட்டிக் கொடுக்கலாம்; பிள்ளை பெறச் செய்யலாமா?
- (பிள்ளை பெறுவதற்கும் பிணைக்கப் படுவார்களா?)
பெண்ணைக் கட்டிக் கொடுப்பவர்கள் பிள்ளை பெறுவதற்குப்
பிணைபடுவார்களா?
பெண்ணைக் காட்டிப் பொன்னைப் பறித்தது போல, 17060
பெண்ணைக் கொடுத்த மாமன். கண்ணைக் கொடுத்த கடவுள்.
பெண்ணைக் கொடுத்தாயோ? கண்ணைக் கொடுத்தாயோ?
பெண்ணைக் கொண்டு பையன் பேயானான்; பிள்ளை பெற்றுச்
- சிறுக்கி நாயானாள்.
பெண்ணைத் திருத்தும் பொள்.
பெண்ணைப் படைத்தாயோ? பேயைப் படைத்தாயோ? 17065