பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தமிழ்ப் பழமொழிகள்



யா

யாசகம் புருஷ லக்ஷணம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

(புறநானூறு.)

யார் குடி கெட்டாலும் நீருடி மிளகு சாறு. 19310


யாரால் கெட்டேன்? நோரால் கெட்டேன்.

(நோரு வாய்.)

யாவையும் பாடிக் கோவை பாடு.

யானும் அறியேன்; அவளும் பொய் சொல்லாள்.


யு


யுகத்திற்கு யுகம் வித்தியாசம் உண்டு,

யுகம் முடிய மழை பெய்தாலும் ஒட்டாங் கிளிஞ்சல்

கரையுமா? 19315

(பயிராகுமா?)