பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106



ரா


ராகு கொடுத்தாலும் கொடுப்பான்; கெடுத்தாலும் கெடுப்பான்.

ராகு தசையில் வாழ்ந்தவனும் இல்லை; ராஜா தசையில்

கெட்டவனும் இல்லை.

19330

(ராஜா - குரு.)


ராகுவைப் போல் கொடுப்பவன் இல்லை; சேதுவைப் போல் கெடுப்பவன் இல்லை.

ராங்கி மிஞ்சி ரும் தேடுகிறது: ஆக்கிப் போட ஆள் தேடுகிறது.

ரrங்கி மொச்சைக் கொட்டை இர மூன்று நாளாய் ஊறின கொட்டை, பொழுது விடிந்து பிதிககிப் பார்த்தால் தோல் கூட வராத கொட்டை.

ராட்டினம் வருகிறது; வண்டியை விலக்கு.

ராத்திரி செத்தால் எண்ணெய்க்கு விதி இல்லை; பகலில் செத்தால்

வாய்க்கரிசிக்கு வழி இல்லை. 19835


ராத்திரி படிக்கிறது ராமாயணம்; விடிந்து இடிக்கிறது பெருமாள் கோயில்.

ராத்திரி பிறந்தவர்களும் உதவாது: பகலில் பிறந்தவர்களும் உதவாது.

ராத்திரி முழுதும் ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன என்றது போல,

சாபனா என்றாளாம்

ராம பாணம் பட்டு உருவினாற் போல. 19340


ராம பாணமே பாணம்; அது எங்கே போச்சுதோ காணோம்.

ராமர் இருக்கிற இடம் அயோத்தி.

ராம ராஜ்யம். ராமரைப் போல ராஜா இருந்தால் அநுமானைப் போலச் சேவகன்

இருப்பான்.
(இருக்க வேண்டும்.)

சாம லகஷ்மணரைப போல இசைந்திருக்கிறது. 19345


ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?

ராமன் மங்கையோடு இணங்கியது அவம்.