பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

11


பெரியோர் வாயில் பொய் நில்லாது.

பெரியோரைக் கண்டு எழாதவன் பிணம்.

பெருக்கப் பெருக்கப் பேயும் குரங்கு ஆனதாம்.

பெருக்காத இடத்துலும் பேசாத இடத்திலும் இருக்க மாட்டேன்.

(திருமகள் கூற்று.)

பெருக்கு ஆற்றில் நீச்சு அறியாதவரை வெள்ளம் கொண்டு போகும். 17125


பெருங்கயிறு முடி அழுந்தாது.

பெருங்காயக் குடுக்கை வாசனை போகாது.

பெருங்காயம் இருந்த பாண்டம் போல.

(பெட்டகம் போல,)

பெருங்காயம் இல்லாத சமையலும் பெரியவர்கள் இல்லாத குடித்தனமும் பாழ்.

பெருங்காயம் தின்ற நாய் போல. 17130


பெருங்காற்றில் அகப்பட்ட சோலையைப் போல.

பெருங்காற்றில் அகப்பட்ட பிள்ளையைப் போல.

பெருங்காற்றில் துரும்பு போல.

பெருங்காற்றில் பூனைப்பஞ்சு பறக்கிறது போல.

(கம்பராமாயணம் இலவம் பஞ்சு.)

பெருங்காற்றும் மழையும் போல. 17135


பெருங்குலத்தில் பிறந்தவன் புத்தி அற்றால் கரும்புப் பூப்போல் இருப்பான்.

(பிறந்தாலும்.)

பெருங் கொடை பிச்சைக் காரருக்குத் துணிவு,

பெருத்த மரங்களை வைத்தவன் உருக்கமாய்த் தண்ணிர் வார்ப்பான்.

பெரு நெருப்பில் புழு மேவுமா?

பெரு நெருப்புக்கு ஈரம் உண்டோ? 17140

(இல்லை.)


பெரும் பாம்பைத் தேரைகள் சுற்றிய கதை.

பெரும் புலியை நாய்கள் சுற்றின கதை.

பெரும்பேன் பிடித்தவருக்கும் பெருங்கடன் வாங்கினவருக்கும் கவலை இல்லை.

பெரும் பேன் பிடித்தவரும் பெருங்கடன் பட்டவரும் முன்னுக்கு வரமாட்டார்கள்.

பெரும் பேன் பிடித்தவனுக்கு அரிப்பு இல்லை;

பெருங்கடன் பட்டவனுக்கு விசாரம் இல்லை. 17145