பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தமிழ்ப் பழமொழிகள்




பெரு மரத்தைச் சுற்றிய கொடியும் சாகாது.

பெருமரத்தைச் சுற்றிய வள்ளிக் கொடி போல.

பெருமழை விழுந்தால் குளிராது.

பெருமாள் இருக்கிற வரையில் கருடன் உண்டு.

பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் உண்டு. 17150


பெருமாள் இருந்தால் அல்லவோ திருநாள் நடக்கப் போகிறது?

பெருமாள் என்ற பெயரை மாற்றப் பெரிய பெருமாள் ஆச்சுது.

பெருமாள் செல்லும் வழியில் புல்லாய் முளைத்தாலும் போதும்.

பெருமாள் நினைத்தால் வாழ்வு குறைவா? பிரமா நினைத்தால் ஆயுசு குறைவா?

பெருமாள் புண்ணியத்தில் பொரிமாவு கிடைத்ததாம். 17155


பெருமாள் புளித்தண்ணிருக்கு அழுகிறார்; அனுமார் ததியோதனம் கேட்கிறார்.

பெருமாள் பெரிய பெருமாள் ஆனாற் போல்.

பெருமாளைச் சேர்ந்தவர்க்குப் பிறப்பு இல்லை; பிச்சைச் சேற்றுக்கு

எச்சில் இல்லை.
(பிழைப்பு இல்லை.)

பெரு மீனுக்குச் சிறு மீன் இரை.

பெருமை உள்ளங்கையிலே வளர்ந்தாலும் பேச்சுரை நல்ல சுரை ஆகாது. 17160


பெருமை ஒரு முறம்: புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை.

பெருமைக்காரன் பின்னால் போனாலும் செருப்புக்காரன் பின்னால்

போகக் கூடாது.

பெருமைக்கு ஆட்டை அடித்துப் பிள்ளையின் கையில் காதைச்

சுட்டுக் கொடுத்தான்.

பெருமைக்குப் பன்றி வளர்க்கிறது போல.

பெருமை கண்டவர் சிறுமை கண்டால் அல்லது தேறார். 17165


பெருமை சொன்னால் கறவைக்குப் புல் ஆகுமா?

பெருமைதான் அருமையைக் குலைக்கும்.

பெருமை பீதக்கலம்; இருக்கிறது ஓட்டைக் கலம்.

பெருமையான தரித்திரன் வீண்.

பெருமையும் சிறுமையும் தான் தர வரும். 17170


பெரு ரூபத்தை உடையவர் எல்லாம் பிரயோசனமாய் இருக்க மாட்டார்.