பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

141

வாழைப்பழத்துக்கு வீங்கித் தோலைப் போட்டான் புல்லாப் பூச்சியே. 20110

(புல் மேலே போட்டால் ஆகாதே. )


வாழைப்பழம் அறியாதவனுக்குத் தோலைப் பிதுக்கிக் காட்டுகிறதா?

வாழைப்பழம் கொண்டு போனவன் வாசலில் இருந்தான்; வாயைக் கொண்டு போனவன் ஒரு வீட்டில் இருந்தான்.

வாழைப்பழம் கொண்டு வக்கவன் வாசற்படியிலே; வாய் கொண்டு வந்தவன் நடு வீட்டுக்குள்ளே.

வாழைப்பழம் சாதத்தோடு எல்லோரும் சாப்பிட்டுப் போகக் கீரைச் சோற்றுக்குக் கதிகெட்டு தின்றவன்.

வாழைப்பழம் தின்னாக குரங்கு உண்டா? 20115

(பிடிக்காத குரங்கு இல்லை.)


வாழைப்பழம் தின்னுகிறது வருத்தமாய் இருக்குமா?

வாழைப்பழம் வேண்டாக் குரங்கு உண்டா?

வாழையில் இருக்கிறது வைப்பு.

வாழை வடக்கு ஈனும்; வான் கமுகு தெற்கு ஈனும்.

(+ மேற்கு வாழ்வு வரும் காலத்திலே.)

வாழை வாட்டமும் வரகு வாட்டமும் தெரியா. 20120


வாழை வாழ வடக்கு, வைத்தவன் வாழக் கிழக்கு, வாழை சாக மேற்கு, வைத்தவன் சாகத் தெற்கு

வாழை வசட்டமும் வெங்காய வாட்டமும் தெரியா.

வாழை வாழ வடக்கு. வைத்தவன் வாழக் கிழக்கு: நாடு வாழ

மேற்கே; நாசமாய்ப் போகத் தெற்கே.

வாள் ஏறுபடத் தேனேற மாய்ந்தாற் போல்.

வாள் பிடித்தவன் கையில் வாழ்நாள். 20125


வானம் இல்லாது நீளாது.

வானாடி மாப்பிள்ளையாய் இருப்பதைக் காட்டிலும் வரகூர்க் கூழைக் கடாவாக இருக்கலாம்.

(வரகூரில் நன்கு வளர்ப்பார்கள்.)

வாளுக்கு ஆயிரம்; தோளுக்கு ஆயிரம்.

வாளுக்கு ஆயிரம், தோளுக்கு ஆயிரம் சம்பாதித்தாலும் மட்டாய்ச் செலவிடு.

வான் குருவியின் கூடும் வன் கறையான் புற்றும் தேன் சிலந்தி இறாட்டும் செய்யத் தெரிவரிது. 20130