பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

15

பே


பேச்சுக் கண்டா சிங்காரம்?

பேச்சுக் கற்ற நாய் வேட்டைக்கு ஆகாது.

(வேட்டை பிடிக்காது.)

பேச்சுக்கு ராவணன்; பிண்டத்துக்குக் கும்பகர்ணன்.

(பின்பு கும்பகர்ணன்.)

பேச்சுக்குப் பேச்சுச் சிங்காரந்தான். 17220

(சிங்காரமா?)


பேச்சுக் கொடுத்துப் பேச்சு வாங்குகிறதா?

பேச்சுப் பராக்கில் சேற்றைக் குழைத்தனங்கள்.

பேச்சுப் பல்லக்கு; தம்பி கால்நடை.

பேச்சுப் பேச்சு என்னும் கிளி பெரும்பூனை வந்தக்கால் கீச்சுக் கீச்சு என்னுமாம்.

(என்னாதாம்.)

பேச்சுப் பேசும் போதே பீச்சிப் புடைவையில் கட்டிக் கொள்கிறா? 17225


பேச்சைக் கொடுத்து ஏச்சை வாங்குகிறது.

பேச்சைக் கொடுத்துப் பேச்சை வாங்கு.

பேச்சை விற்றுக் காய்ச்சிக் குடிக்கிறான்.

பேசத் தெரியாதவன் படிப்பும் வீரம் இல்லாதவன் வாளும் பிரயோசனம் இல்லை.

பேசப் பேச எந்த மொழியும் வரும், 17230

(எந்தப் பாஷையும்.)


பேசப் பிறந்தாயோ: சாகப் பிறந்தாயோ?

(பேசப் போகிறாயோ? சாகப் போகிறாயோ?)

பேசாத வீடும் பெருக்காத வீடும்.

பேசாது இருந்தால் பிழை ஒன்றும் இல்லை.

பேசா மடந்தை பேசும் தெய்வம்.

பேசில் அவலம்: பேசாக்கால் அவலம். 17235