பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

17


பேய்க் கூத்தும் ஆமணக்கும் ஆள் போனால் ஆன் தெரியாது.

பேய்க் கொடை. 17265


பேய் கொண்டாலும் கொள்ளலாம்; பெண் கொள்ளல் ஆகாது.

பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகுமா?

பேய் சிரித்தாலும் ஆகாது; அழுதாலும் ஆகாது.

பேய்ப் புத்தி. நாய்ப் புத்தி, ஏன் இருக்கிறது உன் புத்தி?

(உள் புத்தி.)

பேய் பிடிக்கவும் பிள்ளை பிழைக்குமா? 17270


பேய் பிடித்த பெண்ணும் நாய்ப் பிடித்த பிடியும் ஒன்று.

பேய்ப் பிள்ளை ஆனாலும் தாய் தள்ளி விடுவாரா?

பேய் பிள்ளை பெற்றதும், பிடுங்க நூல் நூற்றதும்.

பேய் போய்ப் புளியமரத்தில் ஏறினது போல.

பேய் வேஷம் போட்டால் ஆடித் தீர வேண்டும். 17275


பேயின் வாயில் பெற்றது பேறு.

பேயும் அறியும் பென்சாதி பிள்ளையை.

பேயும் ஆவது நியாயம் பகரும்.

(பேயும் சில நியாயம் பகரும்.)

பேயும் பிடித்ததாம்; நாயும் குரைத்ததாம்.

பேயும் வளர்க்கும் பின் ஆறு மாசம். 17280


பேயைக் கொண்டிாலும் கொள்ளலாம்; கண்ட மங்கலம்

பெண்ணைக் கொள்ளக் கூடாது.

பேயை நம்பினாலும் பெண்ணை நம் பொணாது.

(நம்பலாகாது.)

பேயைப் பெண்டு படைத்தது போல.

பேயைப் பேய் அடிக்குமா?

பேயைப் போல் அசைகிறதா. 17285

(பறக்கிறதா?)


பேயோடாயினும் பிரிவு இன்னாது.

(பழமொழி நானுாறு.)

பேயோடு பழகினாலும் பிரிவது அரிது.

பேர் இல்லாத சந்நிதி பாழ். பிள்ளை இல்லாத செல்வம் பாழ்.

பேர் கங்கா பவானி; தாகத்திற்குத் தண்ணின் கிடையாது.

(கங்கா தேவி.)

பேர் சந்திரவதனாள்; முகத்தில் அழகு கிடையாது. 17290


பேர் சொல்லப் பிள்ளை நாமம் அற்றுப் போச்சு.

(செல்லப் பிள்ளை ராயர்.)

பேர்த்து அடிவைக்கச் சீவன் இல்லை; பேர் தாண்டவராயன்.