பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192



ஜ


ஜகத்தைக் கொடுத்தும் சுகத்தை வாங்கு. 21325


ஜபம் சாயாது.

ஜம்பம் சாயாது.

ஜயம் உள்ள மட்டும் பயம் இல்லை.

ஜலப் பிராயம்.

ஜலம் அருணாசலந்தான். 21330


ஜலம் கண்ட இடத்தில் கங்கை.

ஜலம் நுழையாத இடத்தில் எண்ணெயும் எண்ணெய் நுழையாத இடத்தில் புகையும் நுழையும்.

ஜலம் விருத்தாசலம்.

ஜலமண்டலி கடித்தால் பரமண்டலந்தான்.

ஜன்மக் குருடனுக்குக் கண் கிடைத்தது போல. 21335


ஜன்மக் குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது.

ஜன்ம குரு ராமர் வனவாசத்திலே.

ஜன்மத்தால் ஜாதியோ, கன்மத்தால் ஜாதியோ?

ஜன்மத்தில் பிறந்தது செருப்பால் அடித்தாலும் போகாது.

ஜன்மம் முந்தியா, கன்மம் முந்தியா? 21340


ஜளத்தோடு ஜனம் சேரும்; சந்தனத்தோடு கற்பூரம் சேரும்.

ஜனபலம் இருந்தால் மனபலம் இரும்.