பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196


பிற்சேர்க்கை


அக்கடா என்று இருக்கிறான்.

அக்கடா என்று கிடப்பேன்.

அக்குசு இருந்தால் செய்வான்

அக்குணிச் சிறுக்சிக்கு முக்கலக் கந்தை.

(கோழி)

அகடித கடனா சாமர்த்தியம். 5


அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

அச்செல்லாம் ஒன்றாய் அதிலே இரண்டு வகை வைச்சதென்ன சோனகிரி வள்ளலே.

அசகாய சூரன்.

அசலுக்கே மோசம் என்றால் வட்டி எது?

அஞ்சில் அம்பதில் ஒன்றறியாதவன். 10

(கம்பராமாயணம்)


அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறியாக்கும்.

அடாவடிக்காரன்.

அடித்து அடித்து அக்காரம் ஊட்டினது போல்.

அண்டப் புளுகு ஆகாசப் புளுகு

அண்ணனுக்கு எட்டாது; தம்பிக்கு எட்டும். 15

(அண்ணன்-மேலுதடு. தம்பி-கீழுதடு. கீழுதடுதான் மேலுதட்டைத் அண்ணன் என்று சொன்னால் உதடுகள் சேரா. தம்பி என்றால் சேரும்)


அண்ணாமலைத் தீபம்.

அண்ணாமலையில் மொட்டைப் பரதேசியைக் கண்டாயா என்றாம் போல்.

அணிலும் மணலிற் புரண்டு ஒட்டிய மணலை அணையிற் போட்டது போல.

அனோரணீயாம் மஹதோர் மஹீயாம்.

அத்தை மடி மெத்தை. 20