பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பழமொழிகள்

197


அத்தோடு ஒன்று; பத்தோடு பதினொன்று.

அதிர அடிக்கிறான்.

அந்தச் சரக்கு இங்கே விலை போகாது.

அநாசாரம் அந்தணனுக்கு ஆகாது.

அநுமான் வால் போல் நீளுகிறது. 25


அப்பனுக்கும் பெப்பே உனக்கும் பெப்பே.

அப்பனைப்போல் பிள்ளை. அபத்தமாகப் பேசாதே.

அம்பட்டன் பொழுது போகாமல் தன் மனைவியின் தலையைச் சிரைத்தானாம்.

அம்மானை ஆடுகிறான்.

அமர்க்களத்தில் ஒப்பாரி உண்டா? 30


அமிஞ்சி வெட்டிக்கு ஆள் இடுகிறது.

அயல் வீட்டுப் பிராம்மணா. பாம்பைப் பிடி, அல்லித்தண்டைப் போல் குளிர்ந்திருக்கும்.

அர்ஜுனன் மனைவிமாரையும் ஆகாசத்து நட்சத்திரங்களையும் எண்ண முடியாது.

அரங்கின்றி வட்டாடி அற்றே. 35


அரசன் மெச்சினவள் ஊர்வசி.

அரண்மனைச் சேவகத்துக்குப் பஞ்சம் இல்லை.

அரவம் ஆட்டேல்.

அருட்செல்வம் செல்வத்தும் செல்வம்.

அருள் அற்றார் எல்லாம் அற்றார். 40


அரைக்காசுக்குப் போன வெட்கம் ஆயிரம் கொடுத்தாலும் வராது.

அரை குலையத் தலை குலைய.

அரைத்த மஞ்சன தாவ தறிந்தேன்.

அரைத்த மர்வையே அரைத்தல்.

(பிஷ்டபேஷண்ய நியாயம்.)

அல்லும் பகலும் அனவரதமும். 45


அலை அடங்கின கடலைப் போல்.

அவ்வினைக்கு இவ்வினை ஆகும்.

அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்.

(தாயுமானவர்.)

ஆக்கத் நெரியும்; படைக்கத் தெரியாது.

ஆகூழ் இருபபதெல்லாம் ஆகும். 50