பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

தமிழ்ப் பழமொழிகள்


ஆங்காரம் அடிங்கினால் பரமானந்த பதவி கிடைக்கும்.

ஆங்காரமதை அடக்கி ஐம்புலனைச் சுட்டெரித்துத் தூங்காமல் தூங்கும் சுகம்.

ஆசா பாசம் அந்தம் வரையில் விடாது.

ஆசானே தெய்வம்.

ஆசி கூற ஆன்றோர் வேண்டும். 55


ஆசை அதிகமானால் மோசம் போவான்.

ஆடிப் பதினெட்டாம் பெருக்கு.

ஆடிப் பாடி அமர்ந்தான்காண் அம்மானை.

ஆடு குழை தின்றது போல.

ஆண்டவன்மேல் பாரத்தைப் போடு. 60


ஆணவம், சன்மம், மாயை என்பவை மூன்று மலங்கள்.

ஆத்தாடி, இந்தக்கொண்டை ஆரைக் குடி கெடுக்க?

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி.

(திருவாசகம்.)

ஆமை நினைத்துக் குஞ்சு பொரிக்கும்.

ஆமை வேகத்தில் நடக்கிறான். 65


ஆயிரம் நாப் படைத்த ஆதிசேஷனாலும் சொல்ல முடியாது.

ஆரே அழகுக்கு அழகு செய்வார்?

ஆளுக்கு ஏற்ற மதிப்பு.

ஆற்றங்கரை மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழும்.

ஆற்றில் கெடுத்துக் குளத்தில் தேடிய ஆதர் போல். 70


ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதி கெடும்.

ஆனை அடி அப்பளம்.

ஆனை ஆனை அழகர் ஆனை.

ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான மதுரை நகர்.

இங்குஸ்தி அங்குஸ்தி. 75


இச்சா பத்தியம்

இசகு பிசசாக இருக்கிறது.

இடி இடிக்க, மழை பெய்ய.

இம்மியளவும் கொடான்.

இமயம் போல் உயர்ந்து நிற்கிறான். 80


இயற்கைக் குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது.

இரட்டை மண்டையன்.