பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பழமொழிகள்

199


இரத்தல் இழிவு தரும்.

இரவல் புடைவையில் தூரமானாற்போல.

இரவி அறியாததைக் கவி அறியான். 85


இரவியின் முன் மின்மினி போல.

இரவில் கேட்ட இராமாயணம் ஓர் ஆள் பாரம்.

இரவு முழுவதும் இராமாயணம் கேட்டுச் சீதைக்கு இராமன் சிற்றப்பன் என்றானாம்.

இருட்டறையில் மலடு கறந் தெய்த்த வாறே.{{float_right|90}


இல்லாதவன் சொல் செல்லாது.

இல்லாதவனை இல்லாளும் நாடாள், ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்.

இளைத்தவனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்.

இன்பம் உண்டேல் துன்பம் உண்டு.

இன்றைக்கு இருப்பாரை நாளைக்கு இருப்பரென்று எண்ணவோ திடம் இல்லை. 95

(தாயுமானவர்.)


ஈரோடு பேன் வாங்கி.

உண்மையே வெல்லும்.

உப்புக்கும் புளிக்கும் பாடுவாள் ஒளவை.

உருகுவது பக்திக்கு அடையாளம்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். 100


உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணனுக்கு நோப்பாளம்.

எல்லை மீறிப் பேசுகிறான்; ஒட்டி ஒட்டி உறவாடுகிறான்.

ஓடு புனற் கரையம் இளமை, உறங்கி விழித்தாலொக்கும் இப்பிறவி.

கண்டு ஒன்று சொல்லேல். 105


கண்ணே கண்ணு, ஒண்ணே ஒண்ணு.

கரும்பிருக்க இரும்புகடித் தெய்த்த வாறே.

கலலார் நெஞ்சில் நில்லான் ஈசன்

கழுதை குங்குமம் தான்சுமந் தெய்த்தால் கைப்பர் பாழ்புக.

கற்றது ஒழுகு. 110


கற்றபடி நில்.

கற்றவர் காய்வது காமனையே.

கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி போல்.