பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

203



அரும் சொற்பொருள் அகராதி


அஃகம்-தானியம்.

அக்காரம்-கற்கண்டு.

அக்குசு-சிரத்தை.

அக்குத் தொக்கு-சம்பந்தம்.

அக்குள்-கட்கம்.


அகம்-வீடு.

அங்கிடு தொடுப்பி-கோள் கூறுபவள்.

அசடு-பொறுக்கு.

அசல்-முதல்.

அச்சை-அருவருப்பு.


அடல்-போரிடுதல்.

அடுக்கனை-சமயலறை,

அடைப்பக்காரன்-நாவிதன்.

அண்ணாவி-உபாத்தியாயர்.

அத்தி-யானை.


அத்து-வரம்பு.

அங்தகன்-யமன்.

அந்தம்-அழகு.

அப்பணை-ஆணை.

அம்முதல்-மறைதல்.


அமணன்-ஜைனன்.

அமர்-போர்.

அமுதுபடி-அரிசி.

அரங்கி-கூத்தாடுபவன்.

அரவு-ராகுகாலம்.


அரை-இடுப்பு.

அல்-இராத்திரி.