பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

தமிழ்ப் பழமொழிகள்


அபத்தன்-முட்டாள்.

அவம்-பயன் இல்லாத செயல்.

அழற்சி-எரிதல்.


அழுவணம்-மருதோன்றி.

அளகேசன்-குபேரன்.

அஸ்மின் கிராமே-எங்கள் ஊரில்.

ஆக்கை-உடம்பு.

ஆகடியக்காரன்-அக்கிரமச் செயல் செய்கிறவள்.


ஆசந்திராக்கம்-சந்திர சூரியர்கள் உள்ள வரையில்.

ஆசார வாசல்-அரண்மனை வாசல்.

ஆண்டி-சிவனடியான்.

ஆண்டை-எஜமானன்.

ஆணம்-குழம்பு.


ஆதாயம்-லாபம்.

ஆதித்த வாரம்-ஞாயிற்றுக் கிழமை.

ஆதி வாரம்-ஞாயிற்றுக் கிழமை.

ஆமலகம்-நெல்லிக்கணி.

ஆயத் தொழில்-சுங்கச் சாவடி வேலை.


ஆயம்-வரி.

ஆயர்-இடையர்.

ஆயோதனம்-போர்.

ஆரியம்-கேழ்வரகு.

ஆலசியம்-தாமதம்.


ஆழி-கடல்.

ஆளன்-கணவன்.

ஆஜ்யம்-நெய்.

இங்கு-பெருங்காயம்.

இசலுதல்-பிணங்குதல்.


இட்டவன்-உணவு படைத்தவன்.

இடம்-இடப்பக்கம்.

இடுதல்-உணவைப் படைத்தல்.

இடை-இடைக்காடர், இடையன், இடைவெளி.

இணல்-நிழல்.