பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பழமொழிகள்

209


மரம்-ஓடம்.

மரவடை-மரங்கள் அடர்ந்த காடு.

மருபூமி-பாலைவனம்.


மருலாரி-பகைவர்.

மறம்-பாவம்.

காணம்-கொள்ளு, கொள்ளுத் துவையல்.

காத்ரம்-உடம்பு.

காதம்-பத்து மைல் தூரம்.


காதல்-கூளப்ப நாயக்கன் காதல்.

காயம்-உடம்பு, பெருங்காயம்.

காரி-எள்.

காரிகை-யாப்பருங்கலக் காரிகை.

கால்-கால்வாய்.


காவுதல்-சுமத்தல்.

காழி-சீகாழி.

காளை-காளையார் கோயிலில் உள்ள பெருமாள்.

கிடை-ஆட்டு மந்தை.

கிலி-அச்சம்.


கீரன்-நக்கிரன்.

குக்க-நாய்

குக்கல்-நாய்.

குசினிக்காரன்-சமையற்காரன்.

குட்டி-குழந்தை.


குட்டு-இரகசியம்.

குண்டுணி-கோள் கூறுகிறவன்.

குண்டை-எருது.

குணக்கு-வளைவு

கும்பி-வயிறு.


கும்பு-கூட்டம்.

குழிசி-பானை

குழை-தழை.

குறடு கட்டை, கன்னம்.