பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

தமிழ்ப் பழமொழிகள்


சோம வாரம்-திங்கட்கிழமை.

சோமன்-சேமேசுவரர் வேஷ்டி.

சோமாரி-சோம்பேறி.


சோலி-வேலை.

சோளி-பை.

சோனகன்-முஸ்லீம்.

தட்டு-சோளத்தட்டு.

தடிமன்-ஜலதோஷம்.


தடியங்காய்-பூசணிக்காய்.

தண்டம்-நமஸ்காரம்.

தண்டு-படை

ததா-அப்படி.

ததியோதனம்-தயிர்ச்சோறு.

தம்பிரான்-கடவுள்.


தரிசு-விளையாத நிலம்.

தவிசு-ஆசனம்.

தனிசு-கடின்

தழுவணி-சேனை.

தாதன்-திருமால் அடியான்.


தாபரம்-கொமு கொம்பு.

தாய்ச்சீலை-கெளபீனம்.

தாரதம்யம்-வேற்றுமை.

தாரம்-மனைவி.

தாழி-பானை.


திண்டி-உணவு.

திறப்பு-சாவி.

தீம்பர்-பொல்லாதவர்.

துங்கா-துங்கபத்திரை ஆறு.

துவி-இரண்டு.


துறடு-அங்குசம்.

துஷ்டி சதுஷ்டயம்-துரியோதனன், துச்சாதனன், சகுனி, கர்ணன் என்னும் நால்வர்.