பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தமிழ்ப் பழமொழிகள்




பைய மிதித்தது வேடன் அடி; பகறி மிதித்தது பன்றி அடி.

பைய மென்றால் பனையையும் மெல்லலாம். 17345


பையலோடு இணங்கின் எய்திடும் கேடு.

பையன் நல்லவன்; பணம் பறியான்.

பையனுக்கு என்ன வரும்? எனக்கு மாசம் இரண்டு சின்னப் பணம் வரும்.

பையா, பருத்தி விதைக்கட்டும் பொறு என்றான், அப்பா எனக்கு ஒரு துப்பட்டி என்றான்.

பையில் கட்டி வைத்த பொருள் பறி கொடுக்கப்பட்டது. 17350


பையைக் கட்டு அவிழ்த்தவன் கை இட்டுப் பார்ப்பான்.