பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தமிழ்ப் பழமொழிகள்



பொட்டைக் கண்ணுக்கு இரட்டைத் தீவட்டி.

பொட்டைக் குதிரைக்கு இரட்டைத் தீவட்டியசம்.

பொட்டைக்குப் பெண் கொடுத்துப் பார்; அந்த வேலையில் தப்பு இருந்தால் கேள். 17375


பொட்டைச்சி படித்துச் சட்டிதானே சுரண்ட வேணும்?

பொட்டைச்சியை முன் தள்ளிப் பொரி உருண்டை வாய் இது என்பான்.

(உண்ட வாய்.)

பொட்டைத் தான்சு.

பொட்டை நாய்க்கு அப்பம் கிடைத்தது போல.

பொட்டை நாய்க்குத் தட்டுக் கூடை மறைப்பு. 17380


பொட்டை நெட்டுரு.

பொட்டையன் பெண்டாட்டியைத் தட்டுகிற மாதிரி,

பொடிச் சூட்டுக்கு ஆற்ற மாட்டாமல் நெருப்பில் குதித்தானாம்.

பொடிப் பயல் நொடிப் பொழுதில் செய்வான்.

பொடி மீன் எல்லாம் பெரு மீனுக்கு இரை. 17385


பொத்தான் பொதுவில் கொடுத்துச் செத்தான்.

பொத்தைச் சுரைக்காய் போல இருக்கிறான்.

பொத்தைப் பலாப் பழத்தைகி கீறி விட்டான் சந்தியிலே,

பொத்தைப் பூசணிக்காய் போல இருக்கிறான்.

பொதிக்கு அளக்கிறதுக்கு முன்னே சத்தத்துக்கு அளக்கிறதா? 17390

(சத்திரத்துக்கு.)


பொதி பொதியாய்ப் பூசணிக்காய் போகிறது; கடுகு போகிற இடத்தை ஆய்கிறான்.

பொதியை வைத்துவிட்டுப் பிச்சைக்குப் போனான்; அதையும் வைத்துவிட்டுச் செத்துக் கிடந்தான்.

பொதுவிலே அகமுடையான் புழுத்துச் செதிதானாம்.

பொதுவிலே மாமியார் புழுத்துச் செத்தாளாம்.

பொத்த மூஞ்சி ராயரே, எந்த மாசம் கல்யாணம்; காயும் கறியும்

உண்டானால் கார்த்திகை மாசம் கல்யாணம், 17395


பெசந்தியோடே கைலாசம் சேர்வாய்,

பொந்தில் அகப்பட்ட மந்தியைப் போல.