பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

23



பொந்தில் இருக்கிற பூசணிக்காய் போகிறதைப் பார். அங்கு இரண்டு போடு போட்டு வருகிறதைப் பார்.

(பொந்தில் விழுந்து. மொத்துப் போட்டு.)

பொந்து ஆயிரம்; புளி ஆயிரம்.

(ஆழ்வார் திருநகரியில் ஆயிரம் வருஷம்.)

பொத்தைச் சுரைக்காயைப் போல. 17400


பொம்மை கோபுரத்தைத் தாங்குமா?

பொய்யான பொருள் ஆசை மெய்யான அருளாசையை விலக்குகிறது.

பொய் இருந்து புலம்பும்; மெய் இருந்து விழிக்கும்.

(கிடந்து புலம்பும் கிடந்து தவிக்கும்.)

பொய் ஒழுக்கத்தார்க்கே பொருல் சேரும்.

பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை; மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை. 17405


பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடையாது.

(அகப்படாது.)

பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது.

பொய் சொன்ன வாயோ பொரி தின்ற வாயோ.

(வாயும்.}

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேணும்.

பொய் நின்று மெய்யே வெல்லும். 17410


பொய் பூரணச் சந்திரன், மெய் மூன்றாம் பிறை.

பொய் பூரணம்: மெய் இறை.

பொய் முன்னே மெய் நிற்குமா?

பொய் மெய்யை வெல்லுமா?

பொய்யாருக்குப் பொய் உரைத்தால் வெற்றியாம். 17415


பொய்யான பொருளாசை மெய்யான அருளாசையை விலக்குகிறது

பொய்யுடை ஒருவன சொல் வன்மையினால் மெய்போலும்மே - மெய்போலுமமே.

பொய்யும் ஒரு பக்கம்: பொருளாசையும் ஒரு பக்கம்.

பொய்யும் மெய்யும் நீளத் தரும்.

(தெரியும்.)

பொய்யும் மெய்யும் போக்கிலே வெளிப்படும். 17420


பொரித்துக் கொட்டிாைலும் அசைத்துக் கொட்டாதே.