பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தமிழ்ப் பழமொழிகள்



பொரி மாவை மெச்சினாளாம், பொக்கை வாய்ச்சி.

(மெச்சினாராம்... வாயர்.)

பொருந்திய ஒழுக்கம் திருந்திய செல்வம்.

பொருள் ஆசையும் மனச்சாட்சியும் பொருந்துமா?

பொருள் இல்லார்க்கு அருளும் இல்லை. 17425


பொருள் இல்லார்க்கு இல்வுலகம் இல்லை; அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை.

பொருள் இல்லார்க்குப் பூலோகம் இல்லை.

பொருள் உள்ளோர்க்குப் பூலோகம் உண்டு; அருள் இல்லோர்க்கு அந்த லோகம் உண்டு.

பொருள்தனைப் போற்றுவான்.

(போற்றிவாழ்)

பொருள் போன வழியே துக்கம் போம். 17430


பொருளும் கொடுத்துப் பழியும் தேடுவதா?

பொருளும் போகமும் கூடவரா: புண்ணியமே கூட வரும்.

பொருளை இச்சித்துப் புது மண்டபத்தை இடிப்பது போல.

(பொது மண்டபத்தை, )

பொருளைப் போட்ட இடத்தில் தேடு.

பொவலாக் குணத்துககுப் பூமியில் மருந்து இல்லை. 17435


பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.

பொல்லாத காலத்துக்குப் புடைவையும் பாம்பு ஆகும்.

பொல்லாத காலம் சொலலாது வந்தது.

(வரும்.)

பொல்லாத காலம் சொல்லாமல் வரும் புரட்டாசியிலே,

பொல்லாத குணத்துக்கு நல்ல மருந்து உண்டா? 17440


பொல்லாத மனம் புத்தி கேளாது.

பொல்லாதவர்கள் சங்காத்தம் உப்பு மணலில் விழுந்த நீர்போல.

(உப்பு மண்ணில்.)

பெல்லாதவர்கள் சினப்பட்டால் கல்லின் பிளவு போல ராசியாக மாட்டார்கள்.

பொல்லாத வேளைக்குப் புழுவும் சாரைப் பாம்பு.

பொல்லாதது எனபது பொய் உடல். 17445


பொல்லாப் பிள்ளை இல்லயப் பிள்ளை.

பொல்லாப் பெண்ணுக்கு எல்லாம் துக்கிரி.