பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

25




பொழுதாலம்குடிக்கு வேறு போக வேணுமா?

(சில வீடுகளே உள்ள ஊர். எப்போது வேண்டுமானாலும் திருடலாம்.)

பொழுது பட்ட இடம். விடுதி விட்ட இடம்.

பொழுது விடிந்தது; பாவம் தொலைந்தது. 17450


பொழுது விடிந்ததே நாராயணா, போட்டுக் கொள்ள வேணுமே நாராயணா.

பொழுது விடியுந்தனையும் மழை பெய்தாலும் கோட்டாங்கிளிஞ்சல் முனையாது.

பொழுது விடியுந்தனையும் இடித்தாலும் புழுக்கைக்கு ஒரு கொழுக்கட்டை.

பொற்கலம் ஒலிக்காது; வெண்கலம் ஒலிக்கும்.

பொற்காப்புக்கு ஆசைப்பட்டுப புலியின் கையில் அகப்பட்டது போல. 17455


பொற்குடத்துக்குப் பொட்டு இட்டது போல.

பொற்குடத்துக்குப் பொட்டு இட்டுய பார்க்க வேண்டுமா?

பொற்குடம் உடைந்தால் பொன்னாகும்; மட்குடம் உடைந்தால் என்ன ஆகும்?

பொற்கொல்லன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் பொன்.

பொற் பூ மணக்குமா? 17460

(வாசிக்குமா?)


பொற் பூவின் வாசனையும் முருக்கம் பூவின் வாசனையும் சரி.

பொறாதவன் கையில் புண.

பொறாதவன் நெஞ்சிலே கொள்ளிக்கட்டையால் சுட வேண்டும்.

பொறியைத் தட்டடா புத்தி கெட்ட ஆசாரி.

(பகைவனைப் பொறியில் அகப்படுத்த.)

பொறி வென்றவனே அறிவின குகுவாம். 17465


பொறுக்கப் பொறுக்கத் தித்திப்பு.

பொறுக்கிப் பயலுடன் சிறுக்கிக்கு என்ன பேச்சு?

பொறுக்கியிலும் பொறுக்கி பொன்னம் பலப் பொறுக்கி,

பொறுககுத் தினனும நாய்க்கு முறுக்கும் திருப்பும் அதிகம்.

பொறுக்கு விதையால் அடுக்கடுகைாய் மணி பிடிக்கும். 17470


பொறுதல் கசப்பாய் இருந்தாலும் பொறுக்கப் பொறுக்கத் தித்திப்பு.

(போகப் போக.)

பொறுததால் அரசு ஆள்வார். பொங்கினால கடு ஆள்வார்.

(பொறுத்தவர்-பொங்கினவர்.பூமி ஆள்வார். பொறாாைம்.)