பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தமிழ்ப் பழமொழிகள்



பொன்னாலே கத்தி என்றால் வயிற்றில் குத்திக் கொள்ள முடியுமா?

பொன்னாலே கலம் உண்டானாலும் மண்ணாலே சுவர் வேண்டும்,

பொன்னாலே பொரித்துத் தங்கத்தாலே தாளிக்கிறாளாம்.

பொன்னான மகள் ஆனாலும் மண்ணாலே ஒரு மாமியார் வேண்டும்.

(பெண் மருமகள்)

பொன்னான மனத்தைப் புண் ஆக்குகிறான். 17530

(ஆக்காதே)


பொன்னான வாயாலே பூத் தருகிறேன் என்றதே போதும்.

பொன்னி பூ முடிப்பதற்குள் பூங்காடே விளாங்காடு ஆச்சாம்.

பொன்னின் கலப்பை வரகுக்கு உழப் போச்சுதாம். வரகுச் செருக்கு வரகு பட்டதாம்.

பொன்னின் குடத்துக்குப் பொட்டு இட வேண்டுமா?

பொன்னின் குடம் உடைத்தால் என்ன ஆகும்; மண்ணில் குடம் உடைத்தால் என்ன ஆகும்? 17535


பென்னின் குணம் போமா? பூவின் குணம் போமா?

பொன்னுக்குப் பொடியாய்ப் போச்சுது.

பொன்னுக்குப் பொன்னும் இழந்து போக சுகமும் இழந்தது போல.

பொன்னும் இரும்பும் ஆன விலங்குகள் போல.

பொன்னும் தெரியாது; பொன் முடிந்த துணியும் தெரியாது. 175400


பொன்னும் பத்தாய் இருக்க வேணும்; பொண்ணும் முத்தாய் இருக்க வேணும்.

பொன்னை எரிந்தாலும் பொடிக் கீரையை எறியலாமா?

பொன்னையும் புடைவையையும் நீக்கிடில் பெண் மலக்கூடு.

பொன்னை விற்றுத் தின்னு: மண்ணை வைத்துத் தின்னு.

பொன்னை வைக்கிற கோவிலில் பூவையாவது வைக்கவேணும். 17545

(வைக்கிற இடத்தில்.)