பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

போ


பேசக்கணம் கெட்ட முயல் பொந்திலே நுழைந்தாற் போல.

போக்கணம் கெட்டவன் போலீஸ்; நாலும் கெட்டவன் நார்மல் ஸ்கூல்; சாகத் துணிந்தவன் சர்வே.

போக்கணம் கெட்டவன் ராஜாவிலும் பெரியவன்.

போக்கனுக்குப் போவதே வழி.

போக்கிரிக்கு ஏற்ற சாக்கிரி. 17550


போக்கிரிக்கு ஏற்றது போலீஸ் வேலை.

போக்கிரிக்குப் போக்கிரி வேண்டும்.

போக்கிரிக்கு முதல் தாம்பூலம்.

போக்கிரித் தனத்துக்கு முதல் தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

போக்கு அற்ற நாய்க்குப் போனது எல்லாம் வழி, 17555


போக்கு அற்ற மத்தளம் கொட்டினதாம்; பூண்டித் தெய்வம் வந்து ஆடினதாம்.

போக்கு அற்றால் புலி ஆள்மேலே பாயும்.

போக்கு அற்றாள் நீக்கு அற்றான்; பொழுது விடிந்து கந்தை அற்றாள்.

போக்கு இடம் கெட்ட முயல் பொத்திலே நுழைந்தாற் போல.

போக்கு இடம் கெட்ட மூளிக்கு மூக்கின் மேலே கோபம். 17560

(மூக்கிலே.)


போக்கு இடம் கெட்டவன் ஊருக்குப் பெரியவன்.

போக்கு இடம் கெட்டவன் ராஜாவிலும் பெரியவன்.

போக்குச் சாதம்,

போக்கு நீக்கு இல்லாமல் புத்திக்குச் சரிப்பட்டபடி பேசுகிறது.

போக்கும் இல்லை; புனலும் இல்லை; முறுக்கிப் பிடிக்க மீசை உண்டு. 17565


போக்கு விடாமல் இருந்தால் நடுமடிை எடுக்கும்.

போகப் போகத் தெரியும் புதுக் கணக்கன் வாழ்வு.

போகப் போகத் தெரியும் பொய்யும் மெய்யும்.