பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தமிழ்ப் பழமொழிகள்




போகமும் புவனமும் பொருந்தும் இடம் எங்கும் தேசகரணம் திரியும்.

போகமும் உடன் உண்டு பொன்னையும் கைக் கொள்ளும் மாதர். 17570


போகாத இடத்தில போனால் வராத சொட்டு வரும்.

(வராத தெல்லாம்.)

போகாத ஊருக்கு வழி ஏன்?

(கேட்கிறது போல, சொல்கிறது போல்.)

போகாத ஊருக்கு வழியும் காராமணிக்குக் களையும்.

போகிற பிசாசு கல்லைத் தூக்கிப் போட்டுப் போயிற்றாம்.

போகிற போது பொறி தட்டினது போல. 17575


போகிறவன் எப்போதும் போவான்.

போகிறவன் பொன்னைத் தின்றால் இருக்கிறவன் இரும்பைத் தின்பானா?

போகிறேன். போகிறேன் என்று பொரியரிசியை மாள வைத்தானாம்.

போசனம் கொஞ்சம் ஆனாலும் ஆசனம் பெரிது.

போசனம் சிறுத்தாலும் ஆசனம் கொடுக்க வேண்டும். 17580


போஞ்ச கொள்ளி புறத்தே.

(நாஞ்சில் நாட்டு வழக்கு.)

போட்ட இடத்தில் தேட வேண்டும்.

போட்டது போட்டபடி,

போட்டால் நெல்; போடா விட்டால் புல்.

போட்டால் முளைக்கும்; பொழுது விடிந்தால் காய்க்கும், 17585


போடு காலில் தேடிப் போடு.

போடு தோப்புக்கரணம் என்றால் எண்ணிக் கொள் என்றானாம்.

போத்தி பிறந்த புதன் கிழமை.

(நாஞ்சில் நாட்டு வழக்கு.)

போதகர் சொல்லைத் தட்டாதே; பாதகர் இல்லைக் கிட்டாதே.

போதருக்கே சோதனை மிஞ்சும். 17590

(போதகருக்கு.)


போதனை பெரிதோ? சாதனை பெரிதோ?

போதாக் குறைக்குப் பொன்னியும் வந்தாள்.

(திரண்டாள்.)