பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

31




போதாத காலத்துக்குப் பழுதையும் பாம்பு ஆகும்.

போதாத காலத்துக்குப் புக்ககத்து அத்தை வந்தாளாம்.

போதாத காலத்துக்குப் புடலங்காயும் பாம்பாய்ப் பிடுங்கும். 17595


போதுக்கும் பாட்டுக்கும் சரி.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

போதும் போதாததற்குப் புக்ககத்து அத்தையும் வந்தாளாம்.

போம் பழி எல்லாம் அமணன் தலையோடே.

போய் ஒரு கோபத்தால் கிணற்றில் விழுந்தால் ஆயிரம் சந்தோஷம்

வந்தாலும் அப்பால் எழுந்திருக்கலாமா? 17600


போயும் வந்தும் பொன்னம்பலம்: திரும்பி வந்தும் திருவம்பலம்.

போர் அடிக்கிற மாட்டின் வாயைக் கட்டலாமா?

போர் இட்ட வீடு நீறு இட்டபின்.

போர் இட்ட வீடு பொடி பட்டு வேகும்.

போர் சுட்டுப் பொரி பொறுக்கி. 17605


போர்த்துக் கொண்டவர்களைக் காக்கும் போக்கணம் கெட்ட குளிர்.

(காத்திருக்கும்.)

போர்த்தொழில் புரியேல்.

போர் பிடுங்குகிறவன் சாகுகிறவனை மிரட்டின கதை,

போர் பிடுங்குகிறவன் பூசக்களம் சாகுகிறவனை மருட்டுகிறானாம்.

போர் மிதிக்கிற மாடு வைக்கோல் தின்னாதா? 17610


போரில் ஊசி தேடின சம்பந்தம்.

போரில் குதிரை நடவாவிடின் வீரர் பறப்பார்,

போருக்கு அஞ்சுவார் என்மேல் படுத்துக் கொள்ளுங்கள்.

போரைக் கட்டி வைத்துப் போட்டுப் பிச்சைக்குப் போவானேன்?

போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கிப் போட்டுக் கட்டுமா? 17615


போலிக்கு ஒரு பொன்மணி கிடைத்ததாம்; அதைத் தூக்கிக் கண்ணில் தொட்டுத் தொட்டுப் பார்த்ததாம்

(வேலைக்கு.)

போலிக்கு ஒரு பொன்மணி கிடைத்ததாம்; அதைப் பொழுது

விடியுமட்டும் தொட்டுத் தொட்டுப் பார்த்ததாம்,

(போலைக்கு.)

போலி நாரி வாடி, காடி மேல் ஏறடி.

(போலை)