பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தமிழ்ப் பழமொழிகள்



போலி பொறுக்கப் போனால் பூனை குறுக்கே போச்சாம்.

(போலை)

போலீஸ்காரன் கையில் சிக்கின மோட்டாரும் செக்குக்காரன் கையில் சிக்கிய மாடும். 17620


போவதும் வருவதும் மோட்டார் வண்டி; பொங்கிதி தின்பது புது மண் சட்டி.

போனார் அடி பொல்லாதடி; வீட்டிலே போய்ச் சொல்லாதடி.

போன அன்றைக்குப் போய்ப் புதன் அன்றைக்கு வா.

போன இடத்தில் புல்லும் முளைக்காது.

போன இடம் புல் முளைத்துப் போயிற்று. 17625


போன கண்ணையும் கொடுக்குமாம் பொன்னாங்காணி,

போன சனியன் பேசச்சு என்று இருந்தேன்; பொந்துக்குள் இருந்து கீச்சுக் கீச்சு என்றது.

(மயிருக்குள் இருந்து)

போன சனியனைத் தாம்பூலம் வைத்து அழைத்தது போல, போன சுரத்தைப் புளியிட்டு அழைத்தது போல.

போன தினம் போகப் புதன் அன்றைக்கு வந்தான், 17630

(போன அன்றைக்குப் போய்)


போனது என்ன ஆனாலும் புத்திக் கொள்முதல். போனது போச்கது;

பொழுது விடிந்தது. போனது போல வந்தானாம் புது மாப்பிள்ளை.

போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.

(இல்லாதவன்)

போன மச்சா. திரும்பி வந்தான் பூமணத்தோடே. 176Յ5


போன மாட்டைத் தேடுவாரும் இல்லை; மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.

போன மாட்டிைத் தேடுவாரும் இல்லை; வந்த மாட்டைக் கட்டுவாரும் இல்லை.

போன முதல் பெரிய முதல்.

போன முயல் பெரு முயல்.

போனவன் உடைமை இருந்தவனது. 17640


போனவன் போனான்: இருந்தவன் வாழ்ந்தான்.

போனால் போன இடம்; வந்தால் வந்த இடம்.

போனால் மயிர் போச்சு.

போனால் வராது; பொழுது போனால் நிற்காது.

போனாற்போல் வந்தாள் புதுமாப்பிள்ளை. 17645