பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தமிழ்ப் பழமொழிகள்


மக்கள் பொன்னாக இருந்தாலும் மாப்பொன் குறையாமல் இருக்குமா? 17655


மக்கள் வயிறும் வாடக் கூடாது; ஆனை அரிசியும் குறையக் கூடாது.

(யானை அரிசியும்.)

மக்களுக்குச் சத்துரு மாதா பிதா.

மக்களைக் காக்கும் மணத்தக்காளி.

மக்காவுக்குப் போய்க் கொக்குப் பிடித்தது போல.

(போயா கொக்குப் பிடிக்க வேணும்?)

மக்குப் பிளாஸ்திரி. 17660


மகத்தில் பிள்ளை ஜகத்தில் இல்லை.

மகத்தில் மங்கை, பூரத்தில் புருஷன்.

மகத்துச் சனி,

மகத்துத் தகப்பன் முகத்தில் விழியான்.

மகத்துப் பெண் வசத்திலே கிடையாது. 17665

(கிடைக்காது.)


மகத்துப் பெண் சகத்துக்கு அதிசயம்.

மகத்துப் பென் முகத்துக்கு ஆகாது.

மகதீசுவரத்தை எண்ணி மனப்பால் குடிக்கிறது.

மகம் மன்னன் ஆவான்.

மகமாயிக்கு மடிப்பிச்சை. 17670


மகமேருவைச் சேர்ந்த காகமும் பொன்னிறமாம்.

(யாப்பருங்கலக் காரிகை.)

மகராஜனுக்கு இடம்விடக் கூடாது; ஏழைக்கு ஆசை சொல்லக் கூடாது.

மகராஜனுக்கு வாழ்க்கைப்பட்டு மஞ்சளுக்குத் தரித்திரமா?

மகள் செத்தால் பிணம்; மகன் செத்தால் சவம்.

மகள் செத்தாள்; தாய் திக்கு அற்றாள். 17675


மகள் பிள்ளையை இடுக்கியும், மகன் பிள்ளையை நடத்தியும்.

மகளுக்கு எட்டோடே எட்டு எண்ணெய், மருமகளுக்குத் தீவிளிக்குத் தீவிளி :எண்ணெய்.

மகளுக்குக் குட்ல் பாக்கியம் தவிர மற்றப் பாக்கியம் எல்லாம் இருக்கிறது.

மகளுக்குப் புத்தி சொல்லித் தாய் அவிசாரி போனாளாம்.

(அதர்மவழி நடந்தாளாம்.)

மகளே, உன் சமர்த்து. 17680