பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தமிழ்ப் பழமொழிகள்


மகிமையிலே ஒரு பெண் குவளையிலே வாழ்கிறாள்; அதிலும் ஒரு பெண் அறுத்துவிட்டு அழுகிறாள்.

(குவளையிலே சாகிறாள்.)

மங்கம்மா காலத்துப் பேச்சு; எங்கம்மா காலத்தில் போச்சு.

மங்கம்மா சாலை மலைமேலே சோலை. 17705


மங்கம்மா வந்தாள்; தங்கமழை பெய்தது.

மங்கலம் முந்தியா? மண் முந்தியா?

(மங்கலம்-மண்கலம்)

மங்கலம் முதல் மணக்குடி வரை.

(கன்யாகுமரி வழக்கு.)

மங்கலமும் திருநாள்; மகள் வீடும் கல்யாணம்; அங்கேதான்

போவானா? இங்கேதான் வருவானா?

மங்கும் காலத்தில் மாப் பூக்கும்; பொங்கும் காலத்தில் புளி பூக்கும். 17710


மங்கும் காலம் மாங்காய்; பொங்கும் காலம் புளி.

மங்குலைக் கண்டி மயிலைப் போல ஆடுகிறாள்.

மங்கை தீட்டானால் கங்கையில் மூழ்குவாள்; கங்கை தீட்டானா எங்கே மூழ்குவாள்?

மங்கை நல்லாள் பெண் பெருமாள் வாழ்த்தெல்லாம்

எத்தனை நாள்? திங்கள் ஒரு பொழுதும் செவ்வாய் பகல் அறுதி, மங்கை முந்தியா. 17715

(மங்கை-உத்தரகோச மங்கை.)


மங்கையர் கண் பெருவிரலைப் பார்க்கும் போதே கடைக்கண் உலகிெல்லாம் சுற்றும்.

மங்கையரில் மீனாட்சி; மாப்பிள்ளைகளில் சொக்கலிங்கம்.

மச்சக் காசில் மிச்சம் இருக்காது.

மச்சத்தின் குஞ்சுக்கு இப்படி என்றால் மாதாவுக்கு எப்படியோ?

மச்சம் விற்ற காசு மன்னனுக்கு ஆகாதா? 17720


மச்சான் அடித்தது உறைக்கவில்லை; மதனி சிரித்தது உறைத்ததாம்.

மச்சான் உறவு மலை மீதும் உண்டு.

மச்சான் செத்தால் மயிர் போச்சு: கம்பளி நமக்காச்சு.

மச்சானை நம்பினால் உச்சாணியில் இருக்கலாம்.

(கிருஷ்ணார்ஜூனர்.)

மச்சானைப் பார்கக உறவும் இல்லை; மயிரைப் பார்க்கக் கறுப்பும் இல்லை. 17725