பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தமிழ்ப் பழமொழிகள்


மட்டை இடம், குட்டி வலம்.

மட்டைக் கரியையும் மடைப்பள்ளியாரையும் நம்பப்படாது.

(மடைப் பள்ளியையும்.)

மட்டைக்கு இரண்டு கீற்று.

மட்டைக்கு ஏற்ற குட்டை,

மட்டைக்கு ஏற்ற கொட்டாப்புளி. 17755


மடக் கிழவியிலும் புத்தியுள்ள வாலியன் அதிகம்.

(கிழவனிலும்.)

மடக்குக் கீரையை வழித்துப் போடடி, மதிகெட்ட பெண்டிாட்டி

மடக் கேள்விக்கு மாறு உத்தரம் இல்லை.

(மாற்று உத்தரம்.)

மடக் கொடி இல்லாத மனை பாழ்.

மடங்காக் குதிரைக்குச் சவுக்கடி. 17760


மட சாம்பிராணி.

மடத்து நாயைச் சாத்துவது போலச் சாத்த வேணும்.

மடத்தையும் கட்டி மடநாயையும் காவல் வைத்தது போல.

மடநாய்க்குத் தடியடி மிச்சம்.

மடப் பெருமையே தவிர நீராகாரத்துக்கும் வழியில்லை.

மடம் பிடுங்கிக் கொண்டு நந்தவனத்துக்கு வழி எங்கே என்றானாம். 17765


மடம் புகுந்த நாய் தடியடிக்குத் தப்பாது.

மடம் விட்டவனுக்கு நந்தவனத்தின்மேல் சபலம்.

(ஆசை ஏன்?)

மடிச் சீலையும் குறையாமல் மக்கள் முகமும் வாடாமல்.

மடிப் பழத்தை விட்டுத் துறட்டுப்பழத்துக்கு நின்றாளாம்.

மடிப்பிச்சை மங்கிலியப் பிச்சை, 17770


மடி மாங்காய் போட்டுத் தலை வெட்டலாமா?

மடியில் இருக்கிற அவல் கொடாதவர் மச்சில் ஏறிக்கொடுப்பார்களா?

மடியில் இருந்த பணம் போய் வழியில் இருந்த சண்டையை வலுவில் இழுத்ததாம்.

மடியில் குழந்தையைக் கிடத்தி ஊர் முழுதும் தேடினாளாம்.

மடியில் கொட்டினால் எடுக்கலாம்: வாயால் கொட்டினால் எடுக்க முடியாது. 17775