பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தமிழ்ப் பழமொழிகள்

 மண்டைக்குத் தகுந்த கொண்டை போட வேணும்.

மண்டையில் எழுதி மயிரால் மறைத்தது போல.

மண்டையில் துணியைக் கட்டிக்கொண்டுச் சண்டைக்கு மார் தட்டுகிறது. 17805


மண்டையை உடைத்து மாவிளக்குப் போட்டிடுவேன்.

மண்ணாங்கட்டி, தெருப்புழுதி.

மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எரு முட்டை பணியாரம்.

மண்ணாங்கட்டியின் குரல் மலைக்குக் கேட்குமா?

மண்ணாய்ப் போவான் காலன், கண்ணா மண்ணா தெரியவில்லை. 17810


மண்ணால் ஆனாய்; மண்ணாய் இருக்கிறாய்.

மண்ணில் இருந்து பெண் ஓரம் சொல்லாதே.

மண்ணில் இருந்து வழக்கு ஓரம் சொல்லாதே.

மண்ணில் பிறந்து மண்ணில் வளர்ந்து.

மண்ணில் முளைத்த பூண்டு மண்ணுக்கு இரையாகும். 17815


மண்ணிலே கிடந்த பொன்னுக்கு மதிப்புக் கொடுத்தது ஆசாரி.

மண்ணிலே பிறந்தது மண்ணில் மறையும்.

மண்ணின்மேல் நின்று பெண் ஓரம் சொல்லாதே.

(இருந்து)

மண்ணை ஆண்டவர் மணலினும் கோடிப் பேர்.

மண்ணுக்குத் தீட்டிப் பார்; பெண்ணுக்குப் பூட்டிப் பார். 17820

(மண்ணுக்குப் பூசிப் பார்.)


மண்ணுக்குள் இருக்கும் மாயாண்டி உரிக்க, உரிக்கத் தோலான்டி,

(வெங்காயம்.)

மண்ணுக்குள் இருப்பது மகிமை; அதை எண்ணிப் பார்ப்பது கடுமை,

மண்ணை ஆண்ட மன்னவர் எத்தனையோ?

(எத்தனை பேர்.)

மண்ணைக் கவ்வுகிற பயில்வானுக்கு மசாலாக் கறி வேறேயா?

மண்ணைக் கீறி மண்ணிலே படுக்கிறார்கள். 17825


மண்ணை தின்றாலும் மறையத் தின்னு.

(மறைவில் தின்னு.)

மண்ணை நம்பினோரும் மன்னனை நம்பினோரும் வீண் போகார்.

மண் தின்னி தைமாசப் பிறப்பு; மாத்தின்னி கார்த்திகை.

மண் தின்னும் குழந்தைக்கு மருந்தூட்டத் தின்பண்டம் காட்டிச்

செல்லத்தாய் அழைப்பது போல.