பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தமிழ்ப் பழமொழிகள்


மணலில் பிடுங்கின வள்ளிக்கிழக்கு போல இருக்கிறான்.

மணலில் புரளும் நாயைப் போல.

மணலின் மேல் விழுந்த மழைத்துளி உடனே மறையும்.

மணலும் கல்லும் மலிந்த பண்டம் புலவர்க்கு. 17860


மணலை அளவிட்டாலும் மனசை அளவிடக்கூடாது.

மணலைக் கயிறாகத் திரிப்பான்; வசனத்தை வில்லாய் வளைப்பான்.

மணலையும் தேசி வடமாக்கலாம்; மணிமுடிச் சிரத்தில் வாழ்ந்திடும் துன்பம்,

மணி அடித்தால் சோறு; மயிர் முளைத்தால் மொட்டை.

மணி என்ன. அறுந்து விழுந்தால் இரண்டு. 17865


மணி நா அசையாமல் ராஜ்ய பாரம் பன்னுகிறது.

மணி மந்திர ஒளவுதம்.

மணியக்காரன் வீடு போல வயிறு பற்றிக் கொண்டு எரிகிறது.

மணியக்காரனுக்கு அரை நாழிகை வேலை: தணியக்காரனுக்குத் தண்டால் அடி.

மணியம் பார்த்த ஊரில் கூலிக்கு அறுப்பதா? 17870


மணியும் ஒளியும் போல்.

மணியாம் பருக்கை போட மகிழ்ந்த கடனைப் போல.

மணையில் பெண்ணை மாற்றி வைக்கிறது; திண்ணையில் பெண்ணைத் திருப்பி வைக்கிறது.

மத்தகத்தில் யானை மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது போல.

மத்தகஜத்துக்கு முன் சிற்றெறும்பு நடந்தது போல. 17875


மத்த கஜம் போல் நடக்கிறான்.

மத்தளத்துக்கு இரு பக்கம் அடி.

மத்து இட்ட தயிர் போல் புத்தி குழம்புகிறது.

மதகு அடி சாவியானாலும் மலை அடி சாவி ஆகாது.

மதகு அடி நன்செயும் மலை அடிப் புன்செயும். 17880


மதம் பிடித்த யானைக்கு மாவுத்தனைத் தெரியுமா?

மதம் பிடித்த யானை போல.

மதம் விரதம் கேட்குது; மத்தியான்னம் பழையது கேட்குது.

மதயானை ஏறியும் திட்பு வாசலில் நுழைந்தாற் போல.

மதயானைக்குப் போனது மார்க்கம். 17885


மதயானை கண்பட்ட மாவுத்தனும் மாற்றாந்தாய் கண்பட்ட குழவியும்.