பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

45


மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்.

மயிர் ஊடாடாத நட்புப் பொருள் ஊடாடக் கெடும்.

மயிர்க் கம்பளி இடையன் தலை மேலே. 17945


மயிர் சிக்கினால் உயிர் வைக்குமா கவரிமான்.

மயிர் சுட்டுக் கரியாகுமா?

மயிர்பிடிச் சண்டை.

மயிர் பிடி, மண் பிடி.

மயிர் பிளக்க வழி தேடினாற் போல. 17950


மயிர் பிளந்தென்ன விவகாரம்.

மயிர் மயிர் என்ற குழந்தை மசிர் மசிர் என்கிறது.

மயிர் விலகினால் மலை விலகும்.

மயிரிலே சவ்வாது வாங்கினாற் போல.

மயிருக்கும் நகத்துக்கும் மதிப்பு இருந்த இடத்தில். 17955


மயிரைக் கொண்டு மாங்காய் எறிந்தால் மாங்காய் விழட்டும்; அல்லது மயிர் விழட்டும்.

மயிரைப் போட்டு மலையை இழுத்தால் வந்தால் மலை; போனால் மயிர்தானே?

மயிரைப் போலக் கறுப்பு இல்லை; மைத்துனனைப் போல உறவு இல்லை.

மயில் ஆடுகிறது என்று வான்கோழி ஆடினாற் போல.

மயில் இரவில் கத்தினால் தப்பாமல் வரும் மகிமை மழை. 17960


மயில் ஒத்திக்கு வலியக் கண்ணைக் கொடுத்தது போல்.

மயில் கண்ணிக்கு மசக்கை வந்தால் மாப்பிள்ளைக்கு அவஸ்தை.

மயில் பப்படாம்; மசால் வடை.

மயில் போலும் கன்னி

மயில் வாகனத்தின்மேல் சுப்பிரமணிய சுவாமி போல. 17965


மயிலாப்பூர் ஏரி உடைந்து கொண்டு போகிறது என்றால், வருகிற கமிட்டிக்கு

ஆகட்டும் என்றாற் போல.

மயிலே மயிலே இறகு போடு என்றால் போடுமா? இழுத்து வைத்துப்

பிடுங்கினால் கொடுக்கும்.

மயிலைக் கண்டு வான்கோழி ஆடினாற் போல.

மர்க்கட சீடனும் மார்ஜால குருவும்.

மர்க்கட நியாயத் தீர்ப்பு. 17970