பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

47


மரம் சுட்டுக் கரியாக வேணுமேயல்லாமல் மயிர் சுட்டுக் கரி ஆகுமா?

மரம் தன்னை வெட்டுகிறவனுக்கும் நிழல் கொடுக்கும். 18000


மரம் நட்டவன் தண்ணீர் வார்ப்பான்.

(விடுவான்.)

மரம் நட்டவனுக்குத் தண்ணீர் வார்க்கக் கடன்.

மரம் நல்லது; முசுடு கெட்டது.

(பொல்லாதது.)

மரம் பழுத்தால் வெளவாலை அழைக்க வேண்டியதில்லை.

மரம் போக்கிக் கூலி கொள்பவர் இல்லை. 18005

(மரம்-ஒடம், பழமொழி நானூறு.)


மரம் மழுங்கினால் மத்துக்கு ஆகும்; மனிதன் மழுங்கினால் ஏதுக்கு ஆவான்?

மரம் முற்றினால் சேகு; மனிதன் முற்றினால் குரங்கு.

மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும் மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.

மரம் வைத்த நாயன் தண்ணீர் ஊற்ற மாட்டானா?

மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான். 18010


மரம் வைத்தவனுக்குத் தண்ணீர் ஊற்றத் தெரியாதா?

மரமரப்புக் காரனுக்கு மூன்று இடத்திலே மலம்.

மரியாதை இல்லாதவன் மகிமை அற்றான்.

மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு.

மரியாதை தப்பினால் மாலவாடு. 18015

(கெட்டால்.)


மரியாதை ராமன் வழக்குத் தீர்த்தாற் போல.

மரியாள் குடித்தனம் சரியrய்ப் போச்சு.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

(அருண்ட தெல்லாம்.)

மருத்துமாவுக்குச் செய்க்கிளை; மடங்காக் குதிரைக்குச் சவுக்கடி.

மருத்துவம் பார்க்கப் போனால் வந்ததைத் தாங்க வேனும். 18020


மருத்துவர்க்கு நோயை மறைக்கலாமா?

(பழமொழி நானூறு. )

மருதமுத்து மாரு மாதம் காதவழி மாயமாய்ப் பறக்கும்.

மருந்துக்கும் கிடையாது.

மருந்து கால், மதி முக்கால்.