பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தமிழ்ப் பழமொழிகள்

 மருந்து சாப்பிட்டு மாமரத்தடியிலும் போகக்கூடிாது: விஷத்தைச் சாப்பிட்டு வேப்பமரத்தடியிலும் போகலாம். 18025


மருந்து தின்றால் பிழையாய் என்றால் மயிர்தான் திண்ணமாட்டேன் என்கிறான்.

மருந்தும் மாயமும்.

மருந்தும் விருந்தும் மூன்று நாள்.

(மூன்று பொழுது.)

மருந்தே ஆயினும் விருந்தோடு உன்.

மரு பூமியில் தண்ணீர் பெற்றார் போலே. 18030

(மருபூமி - பாலைவனம்.)


மருமகள் சோறு தின்றவரும் வாசற்படியில் தூங்கியவரும் ஒன்று.

மருமகளும் மாமியாராவாள்.

மருமகனுக்கு என்று ஆக்கிய சோற்றை மகனுக்குப் போட்டு வயிறு எரிந்தாளாம்.

(அறிந்தாளாம்.)

மருமகளே. மருமகளே. கோழிக்கறிக்குப் பதம் பாரடி; மாமியாரே, மாமியாரே, அது கொக்கோ என்று கொத்த வருகிறது.

மருமகனோடு உண்ணவில்லை என்கிறார்கள் என்று மாமியார் வார்த்த நெய்யைப் புரட்டி உண்டாளாம், மாமியாரைக் கட்டவில்லை என்கிறார்கள் என்று தன் அரை நாண் கயிற்றை அறுத்துத் தாலி கட்டினானாம். 18035


மருவில் தின்ற சாப்பாட்டை லங்கணத்தில் நினைத்துக் கொண்டது போல.

(உண்ட)

மருவுக்கு வாசனை வந்தது போல.

மருவும் மலரும் போல.

மரைக்காயர் வீட்டு மரைக்காயர்.

மரைக்காயருக்கும் உண்டு மாட்டுப் புத்தி. 18040


மல்லாக்கப் படுத்துக்கொண்டுக் மார்பில் உமிழ்ந்து கொண்டாற்போல.

மல்லாந்த தோஷம் வயிற்றில் அடைத்தது.

மல்லாந்து துப்பினால் மார்மேல் விழும்.

(உமிழ்ந்தால்.)

மல்லாந்து படுத்து எச்சிலைத் துப்பினால் மார்மேல் தானே விழும்?