பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தமிழ்ப் பழமொழிகள்


மலிந்த பண்டம் கொள்ளாத வணிகன் பதர்.

மலை அடி கெட்டாலும் மதகடி கெடாது. 18075


மலை அடி புன்செய்; மதகடி நன்செய்.

மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கற்பூரம்.

மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை சாம்பிராணி.

மலை அத்தனை சாமிக்குத் தினை அத்தனை புஷ்பம் சாத்தினாலும் போதும்.

மலை அத்தனை சாமிக்கு மலையத்தனை புஷ்பம் போடுகிறார்களா? 18080

(மலர் படைக்கிறார்களா?)


மலை அத்தனை சாமிக்கு மிளகு அத்தனை கர்ப்பூரம்.

மலை அத்தனை பாவத்திலே கடுகு அத்தனை புண்ணியம்.

மலை இடிந்து விழுந்தாலும் மரப் பொன்னுக்குச் சேதம் இல்லை.

மலை இலக்கானால் குருடனும் அம்பு எய்வான்.

மலை இலக்கு. 18085


மலை இற்று மயிரில் தொங்குகிறது.

(தொங்குகிற வேளை.)

மலை உச்சியில் கல் ஏற்றுதல் அரிது; மலையிலிருந்து கல்லைத் தள்ளுவது எளிது.

மலை எவ்வளவு, உளி எவ்வளவு.

மலை ஏறப் போனாலும் மச்சான் தயவு வேணும்.

மலை ஏறி மேய்ந்தாலும் ஆட்டுக்குட்டி கோனான் குட்டி தானே? 18090


மலை ஏறினாலும் மைத்துனனைக் கை விடாதே.

மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

மலைக்கும் மண்ணாங்கட்டிக்கும் சரியா?

மலைக்கு மண்கட்டி ஆதரவா?

(ஆதரவு.)

மலை கல்லி எலி பிடித்தது போல. 18095


மலை கலங்கினாலும் மனம் கலங்கப் போகாது.

மலை கறுத்தால் மழை வரும்.

மலை குலைந்தாலும் நிலை குலையல் ஆகாது.

மலைச்சாரல் மழையும் மங்கையின் மனமும் திடீரென மாறும்.