பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ப் பழமொழிகள்
51
 


மலை கட்டுக் கரி ஆகுமா? மயிர் சுட்டுக் கரி ஆகுமா? 18100


மலைத்தவருக்குப் பலன் லபிக்கிறதா?

(பலன் கிடைக்குமா?)

மலைத் தேன் முடவனுக்குக் கிட்டுமா?

(வருமா)

மலை நெல்லிக்காய்க்கும் கடல் உப்புக்கும் உறவு செய்தவர் யார்?

மலைப் புளுகு கலப் புளுகாய் இருக்கிறது.

மலை பெரிதானாலுல் சிற்றுளியால் தகரும். 18105


மலை போல் இருக்கிற தேரும் சிறு சுள்ளாணியால் நிலை பெறும்,

மலை போலப் பிராமணன் போகிறானாம்; பின் குடுமிக்கு அழுகிறாளாம்.

மலை போலப் பிராமணன் மாய்த்தானாம்; அவன் உச்சிக்கு அழுதாளாம் பிராமனத்தி.

மலை போன்ற சாமிக்கு மலை போலப் படைக்க முடியுமா?

மலை மல்லிகைக்கு எதிர் பூத்ததாம் ஊமத்தை. 18110


மலை மீது இருப்பவரைப் பன்றி எப்படிப் பாயும்?

மலை மேல் இருக்கிறவனைப் புலி பாயுமா?

மலை மேல் ஏற்றிய விளக்குப் போல.

மலை மேல் மலையாக விழுந்தாலும் மனம் கலங்காத தீரன்.

மலையாளத்துக் குரங்கே, மரத்தை விட்டு இறங்கே. 18115


மலையாளத்து யானை பருக்கை தேய்ப்பது போல.

மலையாளம் பெய்து விளைகிற சீமை, தஞ்சாவூர் பாய்ந்து விளைகிற சீமை.

(பேய்ந்து.)

மலையில் விளைந்த மூலிகை ஆனாலும் உரலில்தான் மசிய வேண்டும்.

மலையில் விளைந்தாலும் உரலில்தான் மசிய வேண்டும்.

(பிறந்தாலும்.)

மலையிலும் மானம் பெரிது. 18120


மலையின் உயரம் மலைக்குத் தெரியுமா?

மலையின் வாயில் பொழுதும் நுளையன் வாயில் சோறும்.

(வயிற்றில்.)

மலையுடன் மண்ணாங்கட்டி எதிர்ப்பது போல.