பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
52
தமிழ்ப் பழமொழிகள்
 


மலையும் மலையும் இடித்துக் கொள்ளும் போது மண்ணாங்கட்டி எந்த மூலை?

மலையும் மலையும் பொருதது போல. 18125


மலையே மண்ணாங்கட்டி ஆகிற போது, மண்ணாங்கட்டி எப்படி ஆகும்?

மலையே விழுந்தால் மண்ணாங்கட்டியா தாங்கப் போகிறது?

மலையே விழுந்தாலும் தலையே தாங்க வேண்டும்.

மலையை என் தலைமேல் தூக்கி வைத்தால் தான் எடுத்துக்

கொண்டு போகிறேன்.

மலையைச் சுற்றடித்தவன் செடியையாகிலும் சுற்றடிப்பான். 18130


மலையைச் சுற்றி அடித்தவனைச் செடியைச் சுற்றி அடியானா?

மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?

மலையைத் துளைக்க வாச்சி உளி வந்தாற் போல.

மலையைத் துளைக்கிற சிற்றுளி போல.

மலையைத் தூக்கி மடியில் கட்டுகிறவன். 18135


மலையைத் தூக்கி வைத்தால் அதைச் சுமக்கிறேன் என்றானாம்.

மலையைத் தோண்டி எலியைப் பிடிக்கிறதா?

மலையை நம்பி இரு; அல்லது ஆற்றை நம்பி இரு.

மலையை நோக்கி நாய் முறைத்தது போல.

மலையைப் பார்த்து நாய் குரைத்தால் நாய்க்கு வலிக்குமா? மலைக்கு வலிக்குமா? 18140

(நாய்க்குச் சேதமா? மலைக்குச் சேதமா? நாய்க்குக் கேடா?)


மலையைப் பார்த்து நாய் குரைத்தாற் போல.

மலையைப் பிடுங்கும் மாகாளியம்மைக்குக் காடு ஒரு சுண்டைக்காய்.

மலையை மயிர் முனையால் துளைக்கலாமா?

மலையை மயிரால் கட்டி இழு: வந்தால் மலை வரட்டும்; அறுந்தால் மயிர் அறட்டும்.

(வராவிட்டால் மயிர் அறட்டும்.)

மலையை மயிரால் கட்டி இழுத்தாற் போல. 18145


மலையை மலை தாங்கும்: மண்ணாங்கட்டி தாங்குமா?

மலையை விழுங்கும் மாரியாத்தாளுக்கு உரல் சுண்டைக்காய்.

மலை வளந்தானே நிலவளம் என்பர்?

மலைவாயிலே சூரியன்; மறவன் வாயிலே சோறு.

(மலைவாயிலே பொழுது.)