பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

53


மலை விழுங்கி அம்மையாருக்குக் கதவு சுண்டாங்கியா? 18150


மலை விழுங்கிச் சுன்டெலியைப் பெற்றது போல.

மலை விழுங்கி மகாதேவனுக்குக் கதவு அப்பளம்.

மலை விழுங்கி மாத்தாங்கிக்கு வண்டிச் சக்கரம் அப்பளம்.

மலை விழுங்கி மாரியாத்தாளுக்கு உரல் சுண்டாங்கி.

மலைவிழுங்குவதற்கு மண்ணாங்கட்டி பச்சடியா? 18155


மலை விழுந்தால் மண்ணாங்கட்டி தாங்குமா?

மலை விழுந்தாலும் தலையே தாங்க வேண்டும்.

மவ்விடப் பவ்வாயிற்று.

மழலைச் சொல் கேளாத காதில் நெருப்பைக் கொட்டு.

மழுங்கணி மாங்கொட்டை. 18160

(மழுங்குணி.)


மழுங்கலுக்கு வட்டியிலே போடு; சவுங்கலுக்குச் சட்டியிலே போடு.

மழை இல்லாததற்குக் குளிர் அதிகம்: வரிசை இல்லாததற்கு வாய் அதிகம்.

மழைக்கால் இருட்டிலும் மறு மாதரைத் தொடருகிறதா?

மழைக்கால் இருட்டு ஆனாலும் மந்தி கொம்பு இழக்கப் பாயுமா?

(கொம்பு இழந்து.)

மழைக்கால் இருட்டு ஆனாலும் வாய்க்குக் கை தெரியாதா? 18165


மழைக்கால் இருளேனும் மந்தி கிளைபாய்தல் பிழைக்காது.

(கொம்பு இழந்து பாயுமா?)

மழைக்கால இருட்டானாலும் கொம்பு தவறிக் கொக்குப் பாயுமா?

மழைக் காலத்தில் பதின் கலத்திலும் கோடைக் காலத்தில் ஒரு குடம் நீர்.

மழைக்கு ஒதுங்க வந்த பிடாரி மனைக்குச் சத்தம் போட்டதாம்.

(வழக்குப் பேசினாளாம்.)

மழைக்குக் குடை உண்டு; இடிக்குக் குடை உண்டா? 18170

(குடையா?)


மழைக்குத் தண்ணிர் மொண்டு வார்ப்பவர் யார்?

மழைக்குப் படல் கட்டிச் சாத்தியமா?

(சாத்தலாமா?)

மழைக்கும் இடிக்கும் படல் கட்ட முடியுமா?

மழைக்கோ படல்? இடிக்கோ படல்?

மழைப் பேறும் பிள்ளைப் பேறும் மகாதேவனுக்கும் தெரியா. 18175