பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ப் பழமொழிகள்
55
 


மறுமங்கையருக்கும் மறுமன்னவருக்கும் மார்பும் முதுகும் கொடாமல் இரு.

மறைத்துக் கட்ட மாற்றுப் புடைவை இல்லை.

மறைந்த புதன் நிறைந்த தனம்.

மறைப்பினும் ஆகாதே தம் சாதி மிக்கு விடும்.

(பழமொழி நானுாறு.)

மன் உயிரைத் தன் உயிர் போல் நினை. 18205


மன்மதக் காட்டு ஓணான்.

மன்மதக் குரங்கே, மரத்தை விட்டு இறங்கே.

மன்மதன் அவனைப் பம்பரம் போல் ஆட்டுகிறான்.

மன்னர்க்கு அழகு செங்கோல் முறைமை.

மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும். 18210

(திருக்கோவையார்.)


மன்னவர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் ஆண்மை.

(மகிமை.)

மன்னவர்கள் செத்தார்கள்; மந்திரிகள் செத்தார்கள்; முன் இருந்தோர் எல்லாம் முடிந்தார்கள்.

மன்னவன் எப்படி, மன்னுயிர் அப்படி.

மன்னன் இல்லாத நாடும் மந்திரி இல்லாத அரசும்.

மன்னன் எவ்வழி, குடிகள் அவ்வழி. 18215


மன்னன் சொல்லுக்கு மறு சொல் உண்டோ?

மன்னார்குடி பழந்தரித்திரம்.

மன்னார்குடி மதில் அழகு.

மன்னார் சாமி போல.

மன்னுயிர்களைத் தன் உயிர் போல நினை. 18220


மனக் கசடு அற மாயை நாடேல்.

மனக் கவலை பலக் குறைவு.

மனக் கஷ்டப்படலாம்; மக்கள் கஷ்டம் பொறுக்காது.

மனக் காவல் பெரிதா, மன்னன் காவல் பெரிதா?

மனக் குரங்கு எப்படி வேண்டுமானாலும் தாவும். 18225


மனச்சாட்சியை விட மறு சாட்சி வேண்டாம்.

(உண்டா இல்லை.)

மனசில் இருக்கும் இரகசியம் மதிகேடனுக்கு வாயிலே.

மனசில் ஒன்றும் வாக்கிலே ஒன்றும்.