பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56
தமிழ்ப் பழமொழிகள்
 


மனசில் உள்ளது வாயில் வரும்.

மனசில் மாசு இருக்கும் பொழுது மகான் ஆக முடியுமா? 18230


மனசிலே பகையும் உதட்டிலே உறவுமா?

மனசு அறியாப் பொய் உண்டா?

மனசு ஒத்ததே இடம்.

மனசு மதிலைத் தாண்டுகிறது. கால் வாசற்படியைத் தாண்டவில்லை.

மனசுக்குப் பிடிக்காமல் தினுசுக்கு ஒரு புடைவையா? 18235


மனசுக்கு மனமே சாட்சி; மற்றதற்குத் தெய்வம் சாட்சி.

மனசு சுத்தமானால் மந்திரம் எதற்கு?

மனசே காரணம்.

மனசே மனசுக்குப் பந்து; மனசே மனசுக்குச் சத்துரு,

மனசே ராஜா, குசுவே மந்திரி. 18240


மனசே ராஜா, மதியே மந்திரி.

(மயிரே மந்திரி.)

மனத்திலே பகை, உதட்டிலே உறவு.

மனத்துக்கம் மண்டையிலே.

மனத்துக்கு இனியவன் மாமன் மகன்.

மனத்துக்கு மனம் சாட்சி. 18245


மனத்துயர் அற்றோன். தினச் செபம் உற்றோன்.

மன நோய்க்கு மருந்து இல்லை.

(உண்டோ?)

மனப்பால் குடிக்காதே.

மனப்பால் குடித்து மாண்டவர் அநேகம்.

(அனந்தம்.)

மனப் பேயே ஒழிய மற்றைப் பேய் இல்லை. 18250

(மற்றவை பேய் அல்ல.)


மனப் பொருத்தம் இருந்தால் மற்றப் பொருத்தம் பார்க்க வேண்டாம்.

மனம் இருக்கும் மணம் போலக் கூழ் இருக்கும் குணம்.

மனம் இருந்தால் மலையும் சாயும்.

மனம் இருந்தால் மாரியம்மா; இல்லாவிட்டால் காளியம்மா.

மனம் இருந்தால் வழி உண்டு. 18255

(மார்க்கம் உண்டு.)