பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

59


மா

மா அளந்த படியைப் போல.

மா இடித்தால் மண்டிக் கொள்கிறது; கூழ் குடித்தால் கூடிக் கொள்கிறது. 18295

மா இருக்கிற மணத்தைப் போல் அல்லவா கூழ் இருக்கிற குணம்?

(குடுவை.)

மா உண்டானால் பணியாரம் சுடலாம்.

மா ஏற மலை ஏறும்.

மாகனப் பட்டது எல்லாம் ஒரு திருணம்; மாட்டுக்காரப்பையனுக்குச் சரணம்.

மாகேச நவ பன்டித. 18300


மாங்கல்யப் பெண்ணுக்கு மாசம் இரண்டு பூசை.

மாங்காய் அழுகலும் மாப்பிள்ளையில் கிழமும் கிடையா.

மாங்காய்க் காலத்தில் மாங்காய் தின்னாவிட்டால், வீங்கித் தூங்கிச் சாவார்கள்.

மாங்காய்க்குத் தேங்காய் மருந்து.

மாங்காய்க்குத் தேங்காய்; வழுக்கைக்கு இளவெந்நீர்; பூங்கதலிக்குச் சுக்கு நீர். 18305


மாங்காய்க்குப் புளியங்காய் தோற்குமா?

மாங்காயில் பெரிசும் தேங்காயில் சிறிசும்.

மாசி ஈனா மரமும் இல்லை; தை ஈனாப் புல்லும் இல்லை.

மாசி என் மச்சின் மேலே.

மாசி என் மடியில் பணம். 18310


மாசிக் கடாவும் மார்கழி நம்பியானும்.

மாசிக் கரும்பும் மகர வாழையும்.

மாசிச் சரடு பாசிபோல் வளரும்.

(படரும்.)