பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தமிழ்ப் பழமொழிகள்


மாசி நிலவும் மதியாதார் முற்றமும் வேசி உறவும் வியாபாரி நேசமும்.

மாசிப் பனி மச்சையும் துளைக்கும். 18315

(பிளக்கும்.)


மாசிப் பிறையை மறக்காமல் பார்.

மாசி பங்குனியில் கரும்பு அறு.

மாசி மகத்தழகும் மகாமகக் குளத்தழகும்.

மாசி மாதத்திலே மறைந்திருந்த கண்மணியே.

மாசி மணிப் பூணுால். 18320


மாசி மரம் தளிர்க்க மழை.

மாசி மழையில் மாதுளை பூக்கும்.

மாசி மாதத்தில் மகம் மதியின் தெற்குக் கோடியில் தேசமும் நாடும் செழிக்கும்.

மாசி மாதம் மண்ணாங்கட்டியும் பிள்ளை பெறுகிறது.

(யாழ்ப்பான வழக்கு)

மாசி மனப் பூக்கும். 18325


மாசி மின்னல் மரம் தழைக்கும்

மாட்டின் காலிலே நெல்; மனுஷன் காலிலே பணம்.

மாட்டின் வாழ்க்கை மூட்டையிலே.

மாட்டு எரு புவிசெய்க்கு தழை எரு நன்செய்க்கு.

மாட்டு எரு மறு வருஷம். 18330


மாட்டுக்கு ஓர் அடி; மனிதனுக்கு ஒரு சொல்.

மாட்டுக்குச் சர்வாங்கமும் வயிறு.

மாட்டுக்குப் பெயர் பெரிய கடா என்று.

மாட்டுக்கு மாடு சொன்னால் கேளாது: மணி கட்டின மாடு சொன்னால் கேட்கும்.

(யாழ்ப்பான வழக்கு)

மாட்டுக்கு மாடு மிரளுமா? 18335


மாட்டுக்கு மேய்ப்யும், குதிரைக்குத் தேய்ப்பும்.

மாட்டுப் பல் மகராசி; அரிசிப் பல் அவிசாரி.

மாட்டைத் தண்ணிரில் போட்டு விலை பேசுகிறாயே!

மாட்டை நடையில் பார்; ஆட்டைக் கிடையில் பார்.

மாட்டைப் பார்த்தாயா என்றால், தோட்டம் தூரம் என்றானாம். 18340