பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பழமொழிகள்

61


மாட்டைப் பிடித்த சனியன் கொட்டிகையைச் சுட்டால் போமா?

மாட்டைப் புல் உள்ள தரையிலும் மனிதனைச் சோறு உள்ள தலத்திலும் இருக்க ஒட்டாது.

(புல் உள்ள தலத்திலும்.)

மாட்டை மேய்த்தானாம்; கோலைப் போட்டானாம்.

மாடக்குளம் பெருகினால் மதுரை பாழ்,

(மாடக் குளம் . மதுரைக்கு மேற்கே உன்ன ஊர். அங்கே ஒரு குளம் உண்டு.)

மாடம் அழிக்கால் கூடம். 18345

(மாடம் மெலிந்தாலும் கூடம், இடிந்தால்.)


மாடிக்கு ஏணி வைக்கலாம்; மலைக்கு ஏணி வைக்க முடியுமா?

மாடு அறியாதவன் மாட்டைக் கொள்.

மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது.

(இளைக்குமா?)

மாடு கன்று படைத்தவருக்கும் மக்களைப் பெற்றவருக்கும் குற்றம் சொல்லலாமா?

மாடு கிழம் ஆனாலும் பாலில் சுவை போகுமா? 18350


மாடு கெட்டால் தேடலாம்; மனிதர் கெட்டால் தேடலாமா?

மாடு திருப்பினவன் அல்லவோ அர்ஜூனன்?

மாடு தின்கிற மாலவாடு ஆடு தின்கிறது அரிதா?

மாடு தின்னிக்கு வாக்குச் சுத்தம் உண்டா?

மாடு தெரியாதவன் மாடக்கொம்பு மாடு வாங்கினது போல. 18355


மாடு நினைத்த இடத்தில் தொழுவம் கட்டலாமா?

மாடு பிடி சண்டைக்கு மூலிய வராதே.

மாடுபோல் உழைத்து மன்னன் போல் வாழ்.

மாடு போனவனுக்குச் செடியெல்லாம் கனி.

மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை பெய்யும். 18360


மாடு மலை ஏறி மேய்ந்தாலும் உடையவன் பேர் சொல்லும்,

மாடு மறத்தாலும் கறக்கும், வாலில் கயிற்றைக்கட்டினால்.

மாடு முக்க முக்க, வீடு நக்க நக்க.

(மாடு முக்கிவர, வீடு நக்கிவர.)

மாடு மேய்க்காமல் கெட்டது; பயிர் பார்க்காமல் கெட்டது.

மாடு மேய்க்கிற தம்பிக்கு மண்டலம் இட்ட பெண்சாதி. 18365


மாடு மேய்க்கிறவன் கூட மாமனார் வீட்டில் இருக்க மாட்டான்.

மாடு மேய்க்கும் குமரனுக்கு மண்டலம் எட்டும் குமரியாம்.