பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

63


மாப்பிள்ளை என்று துரும்பைக் கிவிளிப் போட்டாலும் துள்ளும். 18395


மாப்பிள்ளைக்கு ஆக்கி வைத்த சேற்றை மகனுக்கு இட்டு வயிறு எரிந்தாளாம்.

மாப்பிள்ளைக்கு ஏற்கனவே கோணல் வாய்; அதிலும் கொட்டாவி விட்டுக் காட்டினானாம்.

மாப்பிள்ளைச் சமர்த்து.

மாப்பிள்ளை சமர்த்து என்றால் செம்பை வெளுக்கத் தேய்த்தானாம்.

மாப்பிள்ளை சிங்காரிப்பதற்குன் பெண் வண்டி ஏறிவிடும். 18400


மாப்பிள்ளை சொந்தம்; துப்பட்டி இரவல்.

(அங்கவஸ்திரம்.)

மாப்பிள்ளைத் தோழனுக்குப் பெண்டு அறுதி.

(உறுதி.)

மாப்பிள்ளை தலை போனாலும் போகிறது: மாணிக்கம் போல உள்ள உரல் போகிறது என்றாளாம்.

மாப்பிள்ளை, தோப்பிள்ளை, மாங்காய்ச் சோற்றுக்குக் கதிகெட்ட பிள்ளை.

மாப்பிள்ளை, மண்ணாங்கட்டி தோப்பிள்ளை. 18405


மாப்பிள்ளையில் கிழடு இல்லை.

மாப்பிள்ளையையும் வேண்டிப் பெண்ணையும் வேண்டுகிறதா?

மாப்பிள்ளை வேண்டும் என்று மலைப்பாம்புக்கு வாழ்க்கைப்பட்டது போல.

மாப்பிள்ளை வேஷ்டியைப் பார், அத்தைப்பாட்டி புடைவையைப் போல்.

மாப் புளிக்கிறதெல்லாம் பணியாரத்துக்கு நலம். 18410

(மாவு.)


மாப்பொன் இருக்க, மக்களைச் சாவக் கொடுப்பேனா?

மாப் பொன் இருக்க மக்களைப் பட்டினி போடுவானேன்?

மாபாவி பெயரைச் சொன்னால் மாணிக்கமும் கல் ஆகும்.

மாம்பழத்தில் இருக்கும் வண்டே, மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை.

மாம்பழத்தினுள் வண்டு போல. 18415


மாம்பழம் தின்று தண்ணீர் குடித்தால் மாமியாரோடு போகிற மாதிரி

நெல்லிக்காய் தின்று தண்ணீர் குடித்தால் உடன்பிறந்தாளோடு பேசுகிற மாதிரி.