பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தமிழ்ப் பழமொழிகள்


யாரே, திறந்து பார்த்தேன் அத்தையாரே, பறந்து போச்சு அத்தையாரே.

18460


மாயக்காரன் பேயிற் கடையே.

மாயத்தில் மாரீசனைப் போல.

மாயப் பெண்ணே, சுந்தரி, மாவைப் போட்டுக் கிண்டடி.

மாயன் கயேந்திரனுக்காக வந்தது போல.

மாயூரத்தில் பெண் எடுக்காதே; மன்னார் குடியில் பெண் கொடுக்காதே 18465


மாயூர நாத சுவாமி மகிமையைப் பார்: வந்து கிடக்கிற மொட்டைகளைப் பார்.

மாயூரம் மொட்டை, சிதம்பரம் கொட்டை.

மார் அடித்த கூலி மடிமேலே.

மார்க்கண்டினைப் போல தீர்க்காயுசாய் இரு.

மார்க்கண்டாயுசாய் இரு. 18470


மார்கழிக் கோடை மரம் வெட்டிச் சாய்த்தாற் போல்.

மார்கழித் திங்கள், மடி நிறையப் பொங்கல்.

மார்கழிப் பணி தலையைத் துளைக்கும்.

மார்கழி பிறந்தால் மழை இல்லை.

மார்கழி பிறந்தால் மழையும் இல்லை; பாரதம் முடிந்தால் படையும் இல்லை. 18475

(மார்கழி முடிந்தால்.)


மார்கழி மத்தியில் மாரி பொழிந்தால் சீர் ஒழுகும் பயிர்களுக்கு சேக்ஷமம் மிக உண்டாகும்.

மார்கழி மழை மண்ணுக்கும் உதவாது.

மார்கழி மாதத்து நம்பியானும் ஐப்பசி மாதத்து எருமைக் கடாவும் சரி.

மார்கழி மாதம் மச்சும் குளிரும்.

மார்கழி மாதம் மண் அலம்பப் போது இல்லை. 18480

(மண் குடவும்.)


மார்கழியில் மழை பெய்தால் மலைமேலே நெல் விளையும்.

மார்கழி வெற்றிலையை மாடு கூடத் தின்னாது.

மார்பிலே தைத்து முதுகிலே உருவினது போல.

மார்பு சரிந்தால் வயிறு தாங்க வேண்டும்.

மாசிமட்டும் உறவு இருந்தாலும் மார் மேல் கை போடாதே. 18485

(சிநேகம் இருந்தாலும்.)