பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

71



மி

மிகுதி ஆசை அதிக நஷ்டம்.

மிகுதி உள்ளவனுக்கும் வஞ்சனைக்காரனுக்கும் பகை; வேதக்காரனுக்கும் உலகத்துக்கும் பகை,

மிகுந்தும் குறைந்தும் நோய் செய்யும். 18575

(உணவு.)


மிகைபடச் சொல்லேல்.

மிச்சத்தைக் கொண்டு மேற்கே போகாதே; கெட்டுக் கிழக்கே போகாதே.

மிஞ்சி இல்லா விரலும் மஞ்சள் இல்லா முகமும் பாழ்.

மிஞ்சின கருமம் அஞ்சச் செய்யும்.

மிஞ்சின சுண்ணாம்பையும் மெலிந்த அரசனையும் விடக் கூடாது. 18580


மிஞ்சினது கொண்டு மேற்கே போனால் ஆகாது.

(மிச்சத்தை எடுத்துக் கொண்டு, போகாதே.)

மிஞ்சினால் மென்னி, கெஞ்சினால் கால்.

மிடா விழுங்கிச் சிற்றப்பனுக்கு வறட்டு ஆடு கருவாடு.

மிடி இதயம் கொள்; மீளாக் கதி தொடர்.

மிடிமையிலும் படிமை நன்று. 18585


மிடுக்கல் ஏறிய குதிரைக்கு மேடு ஏது? பள்ளம் எது?

மிடுக்கன் சரக்கு இருக்க விலை பெறும்.

(விலை போகும்.)

மித்திர நேசம் விபத்தில் தெரியும்.

மிதிக்க மிதிக்க லாபம் உண்டு.

மிதித்தாரைக் கடிக்காத பாம்பு உண்டா? 18590


மிதித்தாரைக் கடிக்காது; விதித்தாரைக் கடிக்கும் கால சர்ப்பம்.

மிதித்தால் கடிக்கும் பாம்பு.

மிதி பாகல் விதையோடே.