பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தமிழ்ப் பழமொழிகள்


மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

(மருண்டவன்.)

மிருகங்களில் ஆனை பெரிது; அதிலும் சிங்கம் வலிது. 18595


மிருகம் முறை பார்க்கிறதா. வேசி முறை பார்க்க?

மிருத்தியுவின் கடைவாயிலே அகப்பட்டாற் போலே.

மிளகாய்ப்பழம் தின்பானேன்? நாய் மாதிரி நாக்கைத் தொங்கப் போடுவானேன்?

மிளகு அத்தனை பிள்ளையாருக்குச் கடுகு அத்தனை நைவேத்தியம்.

மிளகு சிறுத்தாலும் வீரியம் போகாது. 38500

(விறுவிறுப்பு, காரம்.)


மிளகுப் பொடியோடே திருவாதிரை.

மின் மினிப் பூச்சிக்கு இருள் போகுமா?

(பூச்சி வெளிச்சத்துக்கு.)

மின்னல் இல்லாமல் இடி உண்டா?

மின்னல் வெட்டிலே முளை நோட்டம் பார்த்தாற்போல.

மின்னலிலே வெட்டு முளை நோட்டம் பார்த்தாற் போல். 18605


மின்னலைக் கண்டு விதை விதைத்தானாம்.

மின்னலைப் போல் பல்லை விளக்காதவனும் மினுக்கிக் கொள்வானும் பதர்

மின்னாமல் இடி விழுமா?

(இடிக்குமா?)

மின்னாமல் முழங்காமல் இடி விழுந்தது போல.

மின்னினால் மழை பெய்யும். 18610

(பெய்யுமா?)


மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.

மின்னுவதெல்லாம் பொன் அல்ல; வெளுத்ததெல்லாம் பால் அல்ல.

மினுக்கு உள்ள அம்பு துன்பம் செய்யும்.

(அன்பு.)

மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு.